இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி குரூப் ஏ பிரிவில் முதலிடத்தினை பிடித்து அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. லீக் சுற்று போட்டிகளில் தோல்வியையே சந்திக்காத இந்திய அணி அடுத்ததாக அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
அரையிறுதியில் வருண் சக்ரவர்த்தி விளையாடனும் : ரவிச்சந்திரன் அஷ்வின்
இந்நிலையில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சார்பாக 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றது அனைவரது மத்தியிலும் பேசப்படும் பொருளாக மாறியது. ஆனாலும் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்தி 10 ஓவர்களில் 42 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
தனது இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் வருண் சக்கரவர்த்தி மிகச் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக அடுத்ததாக செமிபைனல் போட்டியிலும் அவர் விளையாட வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். ஏற்கனவே மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்பத்தை தரக்கூடிய பும்ரா இல்லை என்பதனால் மிடில் ஓவரில் விக்கெட்டை எடுக்கும் வருண் சக்கரவர்த்தி அரையிறுதியில் விளையாடினால் அது இந்திய அணிக்கு பலன் அளிக்கும் என்று பலரும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் வருண் சக்கரவர்த்தி செமி பைனல் போட்டியில் விளையாடுவது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில் : கமெண்ட்ரி பாக்சில் தற்போதே வருண் சக்கரவர்த்தி விளையாட வேண்டுமா? வேண்டாமா? என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். 4 சுழற்பந்து வீச்சாளர்களை பிளேயிங் லெவனில் பார்த்ததும் இதெல்லாம் சரியாக வருமா? என்று விமர்சிக்க ஆரம்பித்தார்கள்.
ஆனாலும் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்துவீசி அனைத்தையும் மாற்றிவிட்டார். என்னை பொறுத்தவரை தற்போது இந்திய அணியில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஏனெனில் நான் வருண் சக்கரவர்த்தியை மூன்றாவது வேகப்பந்து விச்சாளராக பார்க்கிறேன்.
இதையும் படிங்க : பிட்ச் அப்படி இருந்ததால் தான் பொறுமையா விளையாடினேன் .. டீமை மீட்டெடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் – அளித்த பேட்டி
அவர் கையில் புதிய பந்தை கொடுத்து வீச சொன்னாலும் அவர் விக்கெட் வீழ்த்தும் ஒரு பந்துவீச்சாளராகவே இருப்பார். எனவே என்னைப் பொறுத்தவரை அவர் அரையிறுதி போட்டியில் விளையாட வேண்டும் என ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



