நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணியானது 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முதல் இடத்தை பிடித்து தகுதி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி ஒரு கட்டத்தில் 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
என்னுடைய சிறப்பான ஆட்டத்திற்கு இதுதான் காரணம் : ஷ்ரேயாஸ் ஐயர்
அவ்வேளையில் நான்காவது விக்கெட்க்கு ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரது ஜோடி 98 ரன்கள் குவித்து அசத்தியது. பின்னர் ஹார்டிக் பாண்டியாவின் அட்டகாசமான ஆட்டம் காரணமாக இந்திய அணி 50 ஒவர்களின் முடிவில் 9 விக்கெட் டுகளை இழந்து 249 ரன்கள் குவித்தது.
அதன்பின்னர் 250 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்நிலையில் இந்த போட்டியின் போது 98 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் என 79 ரன்கள் குவித்து அசத்திய ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தார்.
தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவர் தன்னுடைய கடினமான காலகட்டம் குறித்தும் அச்சர் பேட்டேலுடன் அமைத்த பார்ட்னர்ஷிப் குறித்தும் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் எந்த ஒரு நபரையும் சார்ந்து இருப்பதை காட்டிலும் தனியாக பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு செயல்பட கற்றுக் கொண்டேன். ஏனெனில் கடினமான காலத்தில் நமக்கு யாரும் உதவவும் முன் வர மாட்டார்கள்.
அந்த நேரத்தில் நமக்கு நாமே நம்பிக்கையை கொடுத்துக் கொள்ள வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எனக்கு நடந்த விடயங்கள் என்னை டெக்னிக்கலாக நிறைய வேலை செய்ய வைத்துள்ளது. நேற்று நான் பேட்டிங் செய்ய வந்தபோது கூட மைதானம் மிகவும் மெதுவாக இருந்தது. அதன் காரணமாகவே நான் மிகவும் பொறுமையாக விளையாடினேன்.
இதையும் படிங்க : அக்சர் பட்டேலின் காலில் விழச்சென்ற விராட் கோலி.. தடுத்து நிறுத்திய அக்சர் படேல் – என்ன நடந்தது?
ரன் எடுக்க மிகவும் சிரமமாக இருந்ததாலே தேவையான பந்துகளை அடித்தும் மற்ற பந்துகளுக்கு மரியாதை கொடுத்தும் மெதுவாக செயல்பட்டேன். அக்சர் பட்டேலும் மிகச் சிறப்பாக எனக்கு ஒத்துழைப்பு தந்தார். முதலில் பொறுமையாக ஆரம்பித்து பின்னர் பவுண்டரிகள் வரவர ஆட்டம் எங்கள் பக்கம் வந்தது என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.



