இதுமட்டும் நடந்தால் இம்முறையும் இந்தியா தான் ஜெயிக்கும்.. பார்டர் கவாஸ்கர் தொடர் குறித்து – ரவி சாஸ்திரி கருத்து

IND-vs-AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியா மண்ணில் கடந்த இருமுறை நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இரண்டு முறையும் டெஸ்ட் தொடரை அவர்களது மண்ணில் கைப்பற்றி அசத்தியது.

அதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்போடு தற்போது அந்த டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. ஏற்கனவே விராட் கோலி தலைமையிலும், ரஹானே தலைமையிலும் இரு முறை ஆஸ்திரேலியா மண்ணில் கோப்பையை வென்ற இந்திய அணியானது மீண்டும் ஒருமுறை தற்போது ரோகித் சர்மா தலைமையிலான கோப்பையை கைப்பற்றி மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் என்பதே பலரது கருத்தாகும் இருந்து வருகிறது.

- Advertisement -

ஆனால் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான பாண்டிங் இதற்கு சற்று வித்தியாசமான கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கடந்த 10 ஆண்டுகளில் இது ஒரு கடுமையான போட்டி தொடராக இருக்கும். கடந்த இருமுறையும் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக தோற்றதால் எங்களுக்கு பழி தீர்க்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் இம்முறை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இருப்பது எங்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். இம்முறை நிச்சயம் ஆஸ்திரேலிய அணி மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாண்டிங்கின் இந்த கருத்திற்கு தற்போது பதிலடி கொடுத்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில் :

- Advertisement -

கடந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியா அவர்களை இருமுறை வீழ்த்தியதால் ஒரு சதாப்த தோல்விக்கு பழிவாங்க ஆஸ்திரேலிய அணி தீவிரமாக காத்திருக்கும். எனவே இம்முறை இந்தியர் அணிக்கு எதிராக அவர்கள் மிகவும் அச்சுறுத்தலாக இருப்பார்கள். இருப்பினும் இந்திய வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : துலீப் கோப்பை 2024 : ரோஹித், கோலிக்கு ஓய்வு.. 5 தமிழக வீரர்கள்.. கேப்டனாக ருதுராஜ், கில்.. 4 அணிகள் இதோ

இது ஒரு ஹெவி வெயிட் தொடராக பார்க்க அனைவரும் ஆர்வமாக இருப்பார்கள். இந்திய அணி அவ்வளவு எளிதாக இந்த தொடரை விட்டுக் கொடுத்து விடாது. இம்முறையும் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்யும் பட்சத்தில் நிச்சயம் ஹாட்ரிக் வெற்றி அடிப்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இந்திய அணியிடம் உள்ளன என்று ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement