இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பையின் 2024 சீசன் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி துவங்குகிறது. அதில் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பரிந்துரைப்படி விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாட உள்ளதாக செய்திகள் வெளியானது. இருப்பினும் மிகப்பெரிய அனுபவத்தை கொண்ட அவர்கள் உள்ளூரில் விளையாட வேண்டிய அவசியமில்லை என்று பிசிசிஐ ஓய்வு கொடுத்தது.
இந்நிலையில் 2024 துலீப் கோப்பைக்காக இந்தியா ஏ, பி, சி, டி அணிகளை தேர்வுக் குழு அறிவித்துள்ளது. அதில் விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், அபிமன்யு ஈஸ்வரன், ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்களாக செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4 அணிகள்:
மேலும் அடுத்த மாதம் துவங்கும் வங்கதேச டெஸ்ட் தொடருக்க்கு தயாராகும் நோக்கத்தில் கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், சிராஜ் உள்ளிட்ட நிறைய நட்சத்திர வீரர்கள் துலீப் கோப்பைபையில் தேர்வாகியுள்ளனர். அந்த 4 அணிகளில் தமிழ்நாட்டிலிருந்து சாய் சுதர்சன், சாய் கிசோர், ஜெகதீசன், சாய் கிஷோர், பாபா இந்திரஜித் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த அணிகள் பின்வருமாறு:
அணி ஏ – சுப்மன் கில் (கேப்டன்), கேஎல் ராகுல், மயங் அகர்வால், ரியான் பராக், துருவ் ஜுரேல், திலக் வர்மா, சிவம் துபே, டானுஷ் கோடின், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, கலில் அஹ்மத், ஆவேஷ் கான், வித்வாத் காவேரப்பா, குமார் குஷக்ரா ஷஸ்வட் ராவத்
அணி பி – அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), ரிஷப் பண்ட், யசஸ்வி ஜெய்ஸ்வால், சர்பாராஸ் கான், முஷீர் கான், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமத் சிராஜ், யாஷ் தயாள், முகேஷ் குமார், ராகுல் சஹர், சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி, நாராயண் ஜெகதீசன்
அணி சி – ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் படிடார்,சூர்யகுமார் யாதவ், அபிஷேக் போரேல், பாபர் இந்திரஜித், ரித்திக் ஷாக்கீன், மாணவ் சுதர், உம்ரான் மாலிக், வியஷக் விஜய்குமார், அன்சல் காம்போஜ், ஹிமான்ஷு சவுகான், மயங் மார்கண்டே, ஆர்யன் ஜுயல், சந்தீப் வாரியர்
இதையும் படிங்க: என்னை விட அந்த விஷயத்தை கட்டுப்பாட்டுடன் செய்யும்.. பும்ரா தான் எனக்கு பிடிச்ச பவுலர்.. வாசிம் அக்ரம் பேட்டி
அணி டி – ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அதர்வா டைட், யாஷ் துபே, தேவ்தூத் படிக்கல், இஷான் கிஷான், ரிக்கி பூய், சரண்ஸ் ஜெயின், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாக்ரே, ஹர்ஷிட் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் செங்குப்தா, கேஎஸ் பரத், சௌரப் குமார்