என்னை விட அந்த விஷயத்தை கட்டுப்பாட்டுடன் செய்யும்.. பும்ரா தான் எனக்கு பிடிச்ச பவுலர்.. வாசிம் அக்ரம் பேட்டி

Wasim Akram
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் பவுலராக போற்றப்படுகிறார். வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அவர் 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அதன் உச்சமாக 2024 டி20 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 17 வருடம் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

அதன் காரணமாக தற்சமயத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா தான் தமக்கு மிகவும் பிடித்த பவுலர் என்று ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி பாராட்டியிருந்தார். அதே போல பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பவுலர் என்று விராட் கோலி சமீபத்தில் தெரிவித்திருந்தார். அந்த வரிசையில் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் தமக்கு மிகவும் பிடித்த வேகப்பந்து வீச்சாளர் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பிடித்த பவுலர்:
அத்துடன் தம்மால் கூட வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக புதிய பந்தை சரியாக கட்டுப்படுத்த முடிந்ததில்லை என்றும் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். ஆனால் பும்ரா அதை மிகவும் சிறப்பாக கட்டுப்படுத்துவதாக பாராட்டும் அவர் இது பற்றி அமெரிக்கன் டிவி எனும் யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “தற்சமயத்தில் பும்ரா உலகில் சிறந்தவராக இருக்கிறார்”

“அவர் ஏணியின் உச்சத்தில் இருக்கிறார். கட்டுப்பாடு, வேகம், வேரியேஷன் போன்ற அனைத்தையும் கொண்டுள்ள அவர் முழுமையான பவுலர். அவரைப் பார்ப்பது விருந்தாக இருக்கும். புதிய பந்தில் அவர் அனைத்து வகையான பிட்ச்சிலும் வேகம், ஃகேரி, ஃபாலோவை பெறுகிறார். அதனாலேயே நீங்கள் அவரை முழுமையான பவுலர் என்று பெயரிடுகிறீர்கள்”

- Advertisement -

“இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அரௌண்ட் தி விக்கெட் திசையிலிருந்து பந்து வீசும் அவர் சீம் பகுதியை பிட்ச்சில் அடிக்கிறார். அதே போல வெள்ளைக் கோட்டிலிருந்து அவர் அகலமாக வீசும் போது பந்து உள்ளே வரும் என்று பேட்ஸ்மேன்கள் நினைப்பார்கள். எனவே பேட்ஸ்மேன்கள் கோணத்தை அடிப்படையாக வைத்து விளையாட முயற்சிப்பார்கள்”

இதையும் படிங்க: பழி வாங்க நினைக்கும் ஆஸியை இதை செஞ்சா இம்முறையும் இந்தியா தோற்கடிக்கலாம்.. ரவி சாஸ்திரி பேட்டி

“ஆனால் பிட்ச்சில் பட்ட பின் பந்து உள்ளே வருவதற்கு பதிலாக வெளியே செல்லும். அது போன்ற தருணங்களில் நீங்கள் பந்தை தவற விடுவீர்கள். நான் விளையாடிய காலங்களில் புதிய பந்தில் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவுட் ஸ்விங்கரை வீச முயற்சிக்கும் போது சில நேரங்களில் பந்தை என்னால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதில் கண்டிப்பாக என்னை விட புதிய பந்தில் ஜஸ்ப்ரித் பும்ரா சிறந்த கட்டுப்பாட்டை கொண்டுள்ளார்” என்று கூறினார்.

Advertisement