- Advertisement -
ஆசிய கோப்பை

இனிமேலும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் எதிரியல்ல.. அந்த லிஸ்ட்ல கடைசியா இருப்பாங்க.. போபாரா ஓப்பன்டாக்

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அத்தொடரில் பாகிஸ்தானை 3 முறை எதிர்கொண்ட இந்தியா 3 வெற்றிகளைப் பெற்று அசத்தியது. மேலும் 2021க்குப்பின் பாகிஸ்தானை கடைசியாக எதிர்கொண்ட 8 போட்டிகளிலும் 8 வெற்றிகளைப் பெற்றுள்ள இந்தியா தங்களின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்துள்ளது.

முன்னதாக இந்தியா – பாகிஸ்தான் அணிகளை பரம எதிரி அணிகள் என்று சொல்வது வழக்கமாகும். ஆனால் இனிமேலும் இந்திய அணிக்கு பாகிஸ்தான் எதிரி கிடையாது என்று ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியின் முடிவில் கேப்டன் சூரியகுமார் தெரிவித்தார். ஏனெனில் 7 – 7 அல்லது 7 – 8 என்பது போன்ற சமமான போட்டியை தரும் அணியே எதிரியாக இருக்கக்கூடும் என்றும் சூரியகுமார் கூறினார்.

- Advertisement -

கடைசியாக பாகிஸ்தான்:

அதற்கு வழக்கம் போல “தோற்றாலும் இந்திய அணிக்கு என்றுமே பாகிஸ்தான் மட்டுமே பரம எதிரி” என்று அந்நாட்டை சேர்ந்தவர்கள் பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் உண்மையிலேயே இந்திய அணிக்கு பாகிஸ்தான் எதிரி அல்லது தரமான போட்டியாளர் கிடையாது என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ரவி போபாரா தெரிவித்துள்ளார். சொல்லப்போனால் இந்தியாவுக்கு நிகரான போட்டியாளர்கள் பட்டியலில் பாகிஸ்தான் கடைசி இடத்தில் தான் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானை இந்தியா பெரிய அச்சுறுத்தலாக பார்க்கும் என்று நான் நினைக்கவில்லை. வேண்டுமானால் அவர்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அல்லது தென்னாப்பிரிக்காவை போட்டியாளராக பார்க்கலாம். அந்தப் பட்டியலில் பாகிஸ்தான் கடைசி இடத்தில் இருப்பார்கள். அங்கே எதிரி என்ற தன்மை இருக்கும்”

- Advertisement -

போபாரா கருத்து:

“அதே சமயம் பாகிஸ்தானை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் இன்று அவர்களை நாம் தோற்கடிக்க வேண்டும் என்று இந்திய அணி தங்களுடைய மீட்டிங்கில் பேசுவார்கள். ஆனால் இந்தியாவின் செயல் திறனை பாகிஸ்தான் வீழ்த்த முடியாது. இந்தியாவின் திறமையை அவர்கள் மிஞ்ச முடியும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியா முற்றிலும் வித்தியாசமான அணியாக இருப்பதால் நம்மில் ஒருவர் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டும் என்று பாகிஸ்தான் அணியில் பேசுவார்கள்”

இதையும் படிங்க: பாகிஸ்தானில் 1% கூட தரமில்ல.. ஆனா இந்திய அணி இப்படி செஞ்சது சரியல்ல.. கபில் தேவ் அதிருப்தி

“ஃபகார் ஜமான் போன்றவர் நமக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பார் என்று பாகிஸ்தான் சிந்தித்தால் அது அவமானமானது. ஏனெனில் பாகிஸ்தானில் நிறைய மக்கள் கிரிக்கெட்டில் விளையாடுகின்றனர். ஆனாலும் சரியானத் திறமையைக் கண்டறிந்து அவர்களால் இந்தியாவுக்கு எதிராக வெற்றிக்கொட்டை தாண்ட முடியவில்லை” என்று கூறினார்.

- Advertisement -