பாகிஸ்தானில் 1% கூட தரமில்ல.. ஆனா இந்திய அணி இப்படி செஞ்சது சரியல்ல.. கபில் தேவ் அதிருப்தி

Kapil Dev
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்து இந்தியா 9 முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. முன்னதாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினர். அதற்கு பதிலடியாக ஆசியக் கோப்பையின் லீக் சுற்று போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணியுடன் கை கொடுக்காமல் இந்திய அணி வெளியேறியது.

அத்துடன் இறுதிப் போட்டியின் முடிவில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொசின் நக்வி தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் அவருடைய கைகளால் கோப்பையை வாங்க முடியாது என்று இந்திய அணி அறிவித்து விட்டது. அதனால் ஏமாற்றமடைந்த அவர் இந்தியா எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக ஆசியக் கோப்பையுடன் வெளியேறினார்.

- Advertisement -

கபில் தேவ் ஏமாற்றம்:

மறுபுறம் இந்திய அணி கையில் கோப்பையை வைத்திருப்பது போல் கொண்டாடி அவருக்கு பதிலடி கொடுத்தது. இந்நிலையில் ஆசியக் கோப்பை வென்ற இந்திய அணி விளையாட்டுடன் இருக்காமல் அரசியலையும் கலந்ததை பார்த்தது ஏமாற்றமளித்ததாக ஜாம்பவான் கபில் தேவ் கூறியுள்ளார். தம்மைக் கேட்டால் இந்திய அணி மற்றும் ஊடகங்கள் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன் பாகிஸ்தான் அணி ஆசியக் கோப்பையில் இந்தியாவிடம் 3 முறை தோற்றது. 80, 90களில் இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்த பாகிஸ்தான் தற்போது திறமையும் தரமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். அந்த காலத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் திறமையில் தற்போது ஒரு சதவீதம் கூட இல்லை என்றும் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தரமற்ற பாகிஸ்தான்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாம் அரசியலின் பக்கத்தைப் பார்ப்பதை விட்டுவிட்டு விளையாட்டின் பக்கத்தைப் பார்க்க வேண்டும் என்று நான் சொல்வேன். இது உங்களுடைய பொறுப்பு. இது மொத்த ஊடகங்களின் பொறுப்பாகும். ஆம் ஊடகங்கள் அனைத்து செய்திகளையும் மேஜையின் மேல் கொண்டு வரும் பொறுப்பைக் கொண்டுள்ளது. ஆனால் ஒரு விளையாட்டு வீரனாக நாம் விளையாட்டில் மட்டும் இருப்பதை நான் பார்க்க விரும்புகிறேன்”

இதையும் படிங்க: 78 பந்தில் சதம்.. இந்தியா 428 ரன்ஸ்.. ஆஸி மண்ணில் சூர்யவன்சி உலக சாதனை.. மெக்கல்லம் சாதனையும் சமன்

“அதுவே இன்னும் நன்றாக இருக்கும். ஆம் 80 மற்றும் 90களில் பாகிஸ்தான் அணியிடம் இதே (இந்தியா) போன்ற திறமை இருந்தது. பாகிஸ்தான் இந்த உலகத்திற்காக சிறந்த கிரிக்கெட்டர்களை கொடுத்தது. நீங்கள் இம்ரான் கான், ஜாவேத் மியான்தத், ஜாகிர் அப்பாஸ், வாசிம் அக்ரம், வகார் யூனிஸ் ஆகியோரைப் பற்றி பேசுவீர்கள். ஆனால் துரதிஷ்டவசமாக இன்று நம்மால் அந்த திறமையில் 1 சதவீதத்தைக் கூட பாகிஸ்தானில் பார்க்க முடியவில்லை” என்று கூறினார்.

Advertisement