- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த இந்திய பேட்ஸ்மேனுக்கு எதிராக பந்து வீசுவது ரொம்ப கடினம்.. அவர் செம டேலன்ட் – ரவி பிஷ்னாய் கருத்து

இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னாய் கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 42 டி20 போட்டிகளில் விளையாடி 61 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதுதவிர்த்து ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள அவர் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதுதவிர்த்து கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் இதுவரை 77 டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

நான் பார்த்ததில் கடினமான பேட்ஸ்மேன் இவர்தான் : ரவி பிஷ்னாய்

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் நிரந்தர இடத்திற்கு போராடி வரும் அவர் நிச்சயம் சுழப்பந்து வீச்சாளர்களுக்கான இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வார் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. இந்திய அணியின் 19 வயதுக்கு உட்பட்டோர் அணிக்காக விளையாடிய அவர் வெகுவிரைவாக ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானது மட்டும் இன்றி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காகவும் அறிமுகமாகி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

ஆனாலும் தற்போது இந்திய அணியில் பல்வேறு திறமையான வீரர்கள் விளையாடி வருவதால் தனது வாய்ப்புக்காக காத்திருக்கும் அவர் உள்ளூர் தொடர்களில் தொடர்ச்சியாக இடம் பிடித்து விளையாடி வருகிறார். நிச்சயம் மீண்டும் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அதில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அவர் கடுமையான போராட்டத்தை அளிப்பார் என்பதில் எவ்வித சந்தேகம் இல்லை.

இந்நிலையில் தான் பந்து வீசியபோது தனக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியின் பேட்ஸ்மேன் யார்? என்பது குறித்த தகவலை தற்போது ரவி பிஷ்நாளை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் பந்துவீசுகையில் எனக்கு எதிராக எந்த ஒரு பேட்ச்மேனாக இருந்தாலும் அவர்களை ஏற்றாமாறு திட்டம் போட்டே பந்து வீசுவேன்.

- Advertisement -

ஆனாலும் அபிஷேக் ஷர்மா என்னுடைய பந்துவீச்சுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடுவார். அவருக்கு எதிராக நான் எப்போது பந்து வீசினாலும் அவர் என்னை விளாசி ரன்களை குவிப்பார். நான் அவருக்கு எதிராக என்ன திட்டங்களை வகுத்தாலும் அவர் எனக்கு எதிராக ரன்களை குவித்து விடுவார்.

இதையும் படிங்க : லெஜெண்ட் கெளதம் சார் தான் எனக்கு.. அந்த ஷாட்டை கத்துக்கொடுத்து மகத்தான ஆதரவை கொடுத்தாரு.. ரிங்கு பேட்டி

எனவே எனக்கு எதிராக நான் பந்துவீசுகையில் மிகக் கடினமாக உணர்ந்த பேட்ஸ்மேன் என்றால் அது அபிஷேக் சர்மா தான் என்று ரவி பிஷ்னாய் கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த 2020-ஆம் ஆண்டு 19 வயதுக்குட்போர் இந்திய அணியில் ரவி பிஷ்னாய் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் ஒன்றாக இணைந்து விளையாடி இருந்த வேளையில் அவரை கடினமான பேட்ஸ்மேன் என ரவி பிஷ்னாய் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -