வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வென்றது. குறிப்பாக அக்டோபர் 12ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா 133 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 297-6 ரன்கள் எடுத்தது.
அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த முழு உறுப்பு நாட்டு அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 111, கேப்டன் சூரியகுமார் யாதவ் 75 ரன்கள் எடுத்தனர். பின்னர் சேசிங் செய்த வங்கதேசம் முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 164-7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
170 தான் டார்கெட்:
அதிகபட்சமாக தவ்ஹீத் ஹ்ரிடாய் 63* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் சவால் விடுத்த வங்கதேசத்தை ஒயிட்வாஸ் செய்த இந்தியா கோப்பையை வென்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. இந்நிலையில் இப்போட்டியில் 300 ரன்கள் அடித்தாலும் உங்களுக்கான இலக்கு 160 – 170 மட்டுமே என்று கேப்டன் சூரியகுமார் சொன்னதாக பிஸ்னோய் கூறியுள்ளார்.
அதன் படி இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே வென்றதாக தெரிவிக்கும் அவர் தங்களுக்கு தாங்களே விடுத்துக் கொண்ட புதுமையான சவால் பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “நாங்கள் களத்திற்கு வந்த போது நாம் 160 – 170 ரன்களை மட்டுமே கட்டுப்படுத்த போகிறோம். 300 ரன்கள் அல்ல என்று சூரியகுமார் சொன்னார். அது வருங்காலங்களில் இப்படி அதிக ரன்கள் அடிக்கப்படும் போட்டிகளில் அசத்துவதற்கு தயாராக எங்களுக்கு உதவும்”
புதிய இந்தியா:
“இது பேட்டிங் செய்வதற்கு நல்ல ஆடுகளமாக இருந்தது. இருப்பினும் மனதளவில் நாங்கள் அதற்குத் தான் தயாராக இருந்தோம். இது தான் புதிய தலைமுறை. அதில் நீங்கள் வித்தியாசத்தை பார்க்க முடியும். 298 ரன்கள் இலக்காக இருந்தாலும் நாங்கள் அட்டாக் செய்து எதிரணியை 160 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய முயற்சித்தோம்”
இதையும் படிங்க: அணிக்குள் இப்படி ஒரு போட்டி இருப்பதும் நல்லதுதான்.. பெஞ்சில் இருந்ததும் நல்லா இருந்தது – ரவி பிஷ்னாய் பேட்டி
“நீங்கள் மேலே இருக்கும் போது தான் இது போன்ற அணுகு முறையை பின்பற்ற முடியும். ஒவ்வொரு நாளும் புதியது என்று இந்த இந்திய அணி நிர்வாகம் எங்களுக்கு கூறியுள்ளது. அந்த வகையில் நேற்றைய போட்டி முடிந்து விட்டது. அதையே நாங்கள் பிடித்துக் கொண்டிருக்க முடியாது” என்று கூறினார். அந்த வகையில் இளம் இந்திய அணி சூரியகுமார் தலைமையில் இலங்கையைத் தொடர்ந்து வங்கதேசத் தொடரிலும் வெற்றி பெற்றுள்ளது.



