ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் ஒரே அடியாக 50 இடங்கள் முன்னேறிய இந்திய வீரர் – விவரம் இதோ

Bishnoi
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை கைப்பற்றிய பின்னர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இந்த தொடரில் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தி அசத்தியது.

இந்த டி20 தொடரில் பல இளம் வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடியதால் அவர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கப் போகிறது என்பதே அனைவரும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. இந்நிலையில் இந்த டி20 தொடரிலும் அவர்களை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் இந்திய அணியின் இளம் வீரர்களைக் கொண்ட அணி வீழ்த்தி அசத்தியது.

- Advertisement -

இந்த தொடர் முடிந்து ஐசிசி வெளியிட்டுள்ள t20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் பலரும் முன்னேற்றம் கண்டுள்ளனர். அந்த வகையில் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடம் வகித்த சூரியகுமார் யாதவ் அதே இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார்.

டாப் 10 பட்டியலில் இருக்கும் ஒரே வீரராகவும் சூரியகுமார் யாதவர் திகழ்கிறார். அதேபோன்று மற்றொரு வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது 6 இடங்கள் முன்னேறி t20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 19-வது இடத்தில் இருக்கிறார். ரிஷப் பண்டும் சில இடங்கள் இடங்கள் முன்னேறி 59-வது இடத்தை பிடித்திருக்கிறார்.

- Advertisement -

இவர்களை தவிர்த்து டி20 கிரிக்கெட்டில் பிரமாதப்படுத்தும் வகையில் இந்திய அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னாய் 50 இடங்கள் முன்னேறி 44-வது இடத்தினை பிடித்து அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை அணியில் தேர்வுசெய்யப்படாத ஆதங்கத்தில் இஷான் கிஷன் – வெளியிட்ட பதிவு

இந்த தொடரில் பல வீரர்களும் முன்னேற்றத்தை கண்ட நிலையில் ரவி பிஷ்னாய் மட்டும் பெரிய அளவில் 50 இடங்கள் முன்னேறி தற்போது அசத்தியுள்ளதால் இனி வரும் டி20 தொடர்களில் அவர் நிச்சயம் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement