50 விக்கெட்ஸ்.. அர்ஷ்தீப், பும்ராவை முந்திய ரவி பிஸ்னோய்.. இந்தியாவின் வருங்கால ஸ்பின்னராக புதிய சாதனை

Ravi Bishnoi
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் 3 – 0 (3) என்ற கணக்கில் வென்றுள்ளது. அதனால் சவால் விட்ட வங்கதேசத்தை டெஸ்ட் தொடரை போல மீண்டும் அடித்து நொறுக்கிய இந்தியா தங்களை வலுவான அணி என்பதை நிரூபித்துள்ளது. குறிப்பாக அக்டோபர் 12ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 297-6 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 111, கேப்டன் சூரியகுமார் யாதவ் 75 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக தன்சிம் ஹசன் 3 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் 298 ரன்களை துரத்திய வங்கதேசம் 20 ஓவரில் 164-7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக தவ்ஹீத் ஹ்ரிடாய் 63* ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

பிஸ்னோய் சாதனை:

இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 3, மயங் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். முன்னதாக இந்தப் போட்டியில் எடுத்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து ரவி பிஸ்னோய் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்த 50 விக்கெட்டுகளை அவர் 24 வருடம் 37 நாட்கள் வயதில் எடுத்துள்ளார்.

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் 50 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ரவி பிஸ்னோய்: 24 வருடம் 37 நாட்கள்*
2. அர்ஷ்தீப் சிங்: 24 வருடம் 196 நாட்கள்
3. ஜஸ்ப்ரித் பும்ரா: 25 வருடம் 80 நாட்கள்
4. குல்தீப் யாதவ்: 28 வருடம் 237 நாட்கள்
5. ஹர்திக் பாண்டியா: 28 வருடம் 295 நாட்கள்

- Advertisement -

வருங்கால ஸ்பின்னர்:

இது போக 33 போட்டிகளிலேயே ரவி பிஸ்னோய் 50 கேட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2வது வேகமாக 50 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல் (போட்டிகள்):
1. குல்தீப் யாதவ்: 30
2. அர்ஷ்தீப் சிங்/ரவி பிஸ்னோய்: தலா 33
3. யுஸ்வேந்திர சஹால்: 34
4. ஜஸ்ப்ரித் பும்ரா: 41

இதையும் படிங்க: டார்கெட் 300 கிடையாது.. உண்மையில் இந்தியா 6 ரன்களில் தான் ஜெய்ச்சுது.. சூரியகுமார் திட்டத்தை பகிர்ந்த பிஸ்னோய்

2020 ஐசிசி அண்டர் 19 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பிஸ்னோய் இந்தியா ஃபைனல் செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதனால் பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி அசத்திய அவர் கடந்த 2022ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் 2 வருடத்தில் 50 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் தன்னை வருங்கால ஸ்பின்னர் என்பதை நிரூபித்து வருகிறார்.

Advertisement