நீங்க நெனைக்குற மாதிரி இது ஒன்னும் அவ்ளோ ஈஸி இல்ல.. புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்திய அணியின் அனுபவ வீரரும் தமிழகத்தை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரருமான 37 வயதான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 100 டெஸ்ட் போட்டிகள், 116 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகள் என மூன்று விதமான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடி உள்ளார்.

அது தவிர்த்து கடந்து 2009-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் இதுவரை 212 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐபிஎல் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் சரி மிகப்பெரிய அனுபவத்தை வைத்துள்ள அஸ்வின் தற்போது அவர் எழுதிய புத்தக ஒன்றை வெளியிட்டு இந்திய அணியில் அவர் சந்தித்த சில தருணங்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.

- Advertisement -

அதன்படி இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அஸ்வின் கூறுகையில் : கிரிக்கெட் விளையாட்டில் சென்னையும் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து தனியாக இருக்கிறது. இந்திய அணி ஒன்றும் வானத்தைப்போல படம் மாதிரி இல்லை. ஒவ்வொரு முறையும் மெட்ராஸ் தனிமைப்படுத்தப்படுவதை நான் உணர்ந்திருக்கிறேன்.

இந்திய அணியில் விளையாடுவது என்பது அவ்வளவு எளிதல்ல என்று தனது கருத்தை பகிர்ந்துள்ளார். மேலும் இந்த விழாவில் பேசிய அவர் : எனது அப்பா என்னை பேட்ஸ்மேனாக தான் உருவாக்க நினைத்தார். ஆனால் நான் ஆஃப் ஸ்பின்னர் பேட்ஸ்மேன் கிடையாது என்று அவரிடம் திட்டவட்டமாக கூறினேன்.

- Advertisement -

அதுதான் என்னுடைய வாழ்க்கையை மாற்றிய தருணம். அதே போன்று ராமகிருஷ்ணபுரம் தெருவில் நான் கிரிக்கெட் விளையாடிய அனுபவத்தை மறக்கவே முடியாது. 2016 வரை நான் தெருவில் கிரிக்கெட் விளையாடி உள்ளேன் என்று பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த சந்திப்பில் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க : 412 சிக்ஸ்.. வெறும் 10.5 ஓவரில் அமெரிக்காவை நொறுக்கிய வெ.இ.. கிறிஸ் கெயிலை முந்தி பூரான் புதிய உலக சாதனை

அதேபோன்று அவர் எழுதிய இந்த புத்தகத்தை முன்னுரையை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எழுதியுள்ளதாகவும், இந்த புத்தகத்தை எழுதி முடிக்க தனக்கு நான்கு ஆண்டுகள் ஆனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement