இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் டிசம்பர் 9ஆம் தேதி கட்டாக் நகரில் துவங்குகிறது. ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் அத்தொடரில் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அத்தொடரில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் வருண் சக்கரவர்த்தி தென்னாப்பிரிக்காவுக்கு சவாலைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மிஸ்ட்ரி ஸ்பின்னர் என்று வல்லுனர்களால் அழைக்கப்படுகிறார். ஏனெனில் அவருடைய மாயாஜாலமான பந்துகளின் மர்மங்களை அறிய முடியாமல் எதிரணி பேட்ஸ்மேன்கள் பலமுறை அவுட்டாகியுள்ளனர். 2021இல் இந்திய அணிக்காக தேர்வான அவர் சுமாராக விளையாடியதால் கழற்றி விடப்பட்டார்.
காட்டிக் கொடுக்காதீங்க:
அதற்காக மனம் தளராத வருண் சக்கரவர்த்தி தம்முடைய திறமையை மெருகேற்றி 2024இல் இந்திய அணியில் கம்பேக் கொடுத்தார். அப்போதிலிருந்து மிகச் சிறப்பாக விளையாடி வரும் அவர் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். இந்நிலையில் வருண் சக்கரவர்த்தியை அனைத்துப் போட்டிகளிலும் விளையாட வைத்து அவருடைய மாயாஜால திறமையை எதிரணிக்கு காட்டிக் கொடுத்து விடாதீர்கள் என்று இந்திய அணியை ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே அவரையும் குல்தீப் யாதவையும் அவ்வப்போது இந்திய அணி பெஞ்சில் அமர வைக்க வேண்டும் என்று அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார். ஏனெனில் இது போன்ற இருதரப்பு தொடர்களை விட 2026 டி20 உலகக்கோப்பையில் வெற்றி பெறுவதே முக்கியம் என்று தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி பின்வருமாறு. “நாம் வருண் சக்கரவர்த்தியை வெளிப்படுத்தக்கூடாது. அவரைப் பாதுகாக்க வேண்டும்”
அஸ்வின் அட்வைஸ்:
“இப்போது நாம் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளோம். அதே அணிகளுக்கு எதிராக நாம் 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்புள்ளது. சக்கரவர்த்தியின் மர்மமான பவுலிங் மிகப்பெரிய விஷயம். நீண்ட வருடங்கள் விளையாடும் அவர் இப்போதும் தம்மை தம்மால் பிடிக்கக் கூடியவர். ஆனால் வருண் மற்றும் குல்தீப் ஆகியோரை அதிகமாக வெளிப்படுத்துவதை நான் தவிர்ப்பேன்”
இதையும் படிங்க: நேதன் லயன் மாதிரி.. இந்தியாவில் யூனிவர்ஸ் பாஸ்ன்னு அபிஷேக் சொல்ல முடியுமா? அஸ்வின் ஆதங்கம்
“அவர்கள் இருவருமே உலகக்கோப்பையில் ஒன்றாக விளையாடப் போகிறார்கள். எனவே வருண் சக்கரவர்த்தியின் மாயாஜாலம் மற்றும் மர்மமான பந்து வீச்சை அதிகம் வெளிக்காட்டாமல் இருப்பது முக்கியம். ஏனெனில் இந்த அணிகள் டி20 உலகக்கோப்பை நம்மை நாக் அவுட் சுற்றில் எதிர்கொள்ளக்கூடும். எனவே வருண் திறமையைக் கண்டறியும் வாய்ப்பை அவர்களுக்கு நாம் கொடுக்கக்கூடாது. அவருக்கு எதிராக அதிகம் விளையாடும் போது அவருடைய மாயாஜாலம் கண்டறியப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது” என்று கூறினார்.



