நேதன் லயன் மாதிரி.. இந்தியாவில் யூனிவர்ஸ் பாஸ்ன்னு அபிஷேக் சொல்ல முடியுமா? அஸ்வின் ஆதங்கம்

R Ashwin
- Advertisement -

ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இங்கிலாந்தை தோற்கடித்துள்ள ஆஸ்திரேலியா 2 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக நவீன டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் மற்றும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் மட்டுமே 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து தரமான ஸ்பின்னர்களாக சாதனை படைத்துள்ளனர்.

அதில் கடந்த ஆஸ்திரேலியா தொடருடன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்று விட்டார். இருப்பினும் 38 வயதாகும் நேதன் லயன் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்காக விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்தும் அஸ்வினுக்கு வெளிநாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே போல தற்போது லயனுக்கும் ஆஸ்திரேலியா அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பதில்லை.

- Advertisement -

இந்தியாவில் பேச முடியுமா:

இதுவரை நடைபெற்ற 2 ஆஷஸ் போட்டிகளிலும் பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் காபாவில் நடைபெற்ற 2வது போட்டியில் தம்மைக் கழற்றி விட்டது பற்றி அதிருப்தியை வெளிப்படுத்தினார். குறிப்பாக தம்மை தேர்ந்தெடுக்காததை விரும்பவில்லை என்று சொன்ன அவர் பெருத்த ஏமாற்றத்தைச் சந்தித்ததாகவும் வெளிப்படையாக பேசினார். இருப்பினும் அதற்கு ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை.

இந்நிலையில் லயன் போல ஒரு இந்திய வீரரால் இப்படி வெளிப்படையாக பேச முடியாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஏனெனில் அப்படி பேசினால் இந்திய அணியிலிருந்து நீக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாதன் லயன் அதிர்ஷ்டமானவர். அணியிலிருந்து நீக்கப்படும் யாராக இருந்தாலும் உணர்ச்சிகளின் உச்சத்திற்கு சென்று உலகத்திற்கு முன் லயன் போலவே பேசுவார்கள்”

- Advertisement -

நிலைமை மாறனும்:

“அவர் ஊடகத்தில் தன்னுடைய பார்வையை வெளிப்படுத்தினார். அதற்காக ஆஸ்திரேலியா அணி வருத்தப்படவில்லை. அடுத்ததாக அவர் அடிலெய்ட் போட்டியில் விளையாடக்கூடும் என்பதால் அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன். இருப்பினும் என்னால் இப்படி எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாது. ஏனெனில் அப்படி பேசினால் எனக்கு நானே தீங்கிழைப்பேன். எனவே அதை நான் ஏன் செய்ய வேண்டும்?”

இதையும் படிங்க: இரட்டை சாதனையை தெ.ஆ டி20 தொடரில் நிகழ்த்த காத்திருக்கும் ஹார்டிக் பாண்டியா – விவரம் இதோ

“இருப்பினும் அதை தைரியமாக செய்த லயனை நான் மதிக்கிறேன். இந்தியாவில் எங்கள் கருத்தை சொல்ல அனுமதி உண்டு. ஆனால் இங்கே உங்களது கருத்துக்கு மதிப்பு கிடைக்காது. இந்த நிலைமை மாறும் என்று நம்புகிறேன். எடுத்துக்காட்டாக சிறந்த வீரரான கிறிஸ் கெய்ல் தம்மை யுனிவர்சல் பாஸ் என்று தெரிவித்துள்ளார். நாளை ஊடகத்திற்கு முன் கழுத்தில் பெரிய சங்கிலிகளை போட்டுக்கொண்டு அபிஷேக் சர்மா வந்து “நான் தான் யுனிவர்சல் பாஸ்” என்று சொன்னால் நாம் ஏற்றுக்கொள்வோமா? இல்லை” எனக் கூறினார்.

Advertisement