என்னடா இது நம்ம அஷ்வினுக்கு வந்த சோதனை? முதலாவது போட்டியில் நடந்த சம்பவத்தை – கவனிச்சீங்களா?

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. 513 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய வங்கதேச அணியானது 324 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

KL Rahul Shakib Al Hasan

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியின் போது பங்கேற்று விளையாடிய தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் செயல்பாடு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் பேட்டிங்கில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 113 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 58 ரன்கள் குவித்து அசத்தினார்.

இருப்பினும் பந்துவீச்சில் அவரது செயல்பாடு சுமாராகவே இருந்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் எப்போதுமே ஆசிய மைதானங்களில் மிகச்சிறப்பாக பந்துவீசும் அஸ்வின் இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் 10 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. அதேபோன்று இரண்டாவது இன்னிங்ஸில் 27 ஓவர்கள் வீசிய அவர் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

Ashwin

வெகு விரைவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் முன்னேறி வரும் அஸ்வின் இந்த தொடரின் முதல் போட்டியிலேயே சறுக்களை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

அஷ்வின் ஒரு பேட்ஸ்மேனாக பின் வரிசையில் நின்று ரன்களை குவிப்பதை விட பந்துவீச்சில் அதிக விக்கெட் கைப்பற்றி அணிக்கு பங்களிக்க கூடிய ஒரு வீரராகவே ரசிகர்கள் அவரை எதிர்பார்க்கின்றனர். ஆனால் இந்த போட்டியில் அவரது பந்துவீச்சு மிகவும் சுமாராகவே இருந்தது ஏமாற்றத்தை அளித்தது.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் பண்ண இந்த விஷயத்தை பாத்தா தோனியே பெருமைப்படுவாரு – தினேஷ் கார்த்திக் புகழாரம்

அதே வேளையில் அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவருமே இந்த போட்டியில் அசத்தலாக பந்துவீசினார்கள். இதன் காரணமாக எதிர்வரும் இரண்டாவது போட்டியில் மீண்டும் அஷ்வின் ஒரு விக்கெட் டேக்கர் என்பதை நிரூபிப்பார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement