தமிழக வீரர் அஷ்வினுக்கு டெஸ்ட் அணியில் கிடைக்கவுள்ள பதவி – அடுத்த கட்டத்திற்கு செல்லும் நம்ம வீட்டுப்பிள்ளை

Ashwin
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது வரும் 26-ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அனைத்து வீரர்களும் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வரும் 16-ம் தேதி தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு முதலில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

IND

அதன் பிறகு நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான டெஸ்ட் அணி மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் விராட் கோலி கேப்டனாகவும், ரோகித் சர்மா துணைக்கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியின் துணை கேப்டனாக யார் செயல்படுவார்கள் என்ற பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் ஏற்கனவே ரஹானே அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் மீண்டும் அவருக்கு அந்த பதவியை வழங்க மாட்டார்கள் என்பதனால் அடுத்ததாக அணியின் அனுபவ வீரரான தமிழக வீரர் அஷ்வினுக்கு அந்த பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ashwin

ஏனெனில் தற்போதுள்ள அணியில் விராட் கோலிக்கு இணையான அனுபவமுடைய வீரராக அஷ்வின் திகழ்கிறார். இதன் காரணமாக நிச்சயம் தென்னாப்பிரிக்க தொடருக்கான டெஸ்ட் அணியின் துணை கேப்டன் வாய்ப்பு அவருக்கு வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது. ஏற்கனவே வெளிநாட்டு தொடர்களில் அஷ்வினை கோலி வேண்டுமென்றே ஒதுக்கி வருகிறார் என்று அனைவரும் கூறிவரும் வேளையில் அஷ்வினுக்கு துணை கேப்டன் பதவி கிடைக்கும் பட்சத்தில் அவரை அணியில் இருந்து எப்போதுமே நீக்க முடியாதபடி அத்தியாவசியமான வீரராக மாறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : போயும் போயும் க்ருனால் பாண்டியாவுக்கு எதிராகவா இப்படி நடக்கனும் – தமிழக அணி சந்தித்த மோசமான தோல்வி

அதே நேரத்தில் அணி நிர்வாகம் இளம் வீரர்களுக்கு துணை கேப்டன் பதவியை கொடுக்க நினைத்தால் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவருக்கு அந்த பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement