என்னிடம் உள்ள இந்த திறமையே என்னை சிறப்பாக செயல்பட வைக்கிறது – ரஷீத் கான் பேட்டி

Rashid-khan
- Advertisement -

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற 8 ஆவது போட்டியில் சன் ரைசர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 198 ரன்களை அடித்தது. அந்த அணி சார்பாக சாம்சன் 55 பந்துகளில் 102 ரன்களை அடித்தார். மேலும், கேப்டன் ரஹானே 70 ரன்களை அடித்தார்.

Srh

- Advertisement -

இதனால் சன் ரைசர்ஸ் அணிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆட துவங்கிய சன் ரைசர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பேர்ஸ்டோ சிறப்பான துவக்கத்தினை அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவர்களில் 110 ரன்களை சேர்த்து. இதனால் பின்னால் வந்த வீரர்கள் எளிமையாக வெற்றிக்கான இலக்கினை அடித்தனர். இதனால் சன் ரைசர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் 69 ரன்களும், பேர்ஸ்டோ 45 ரன்களையும் குவித்தனர்.

வெற்றிக்கு பிறகு பேசிய ஆட்டநாயகன் ரஷீத் கான் கூறியதாவது : நான் எப்போதும் ஆட்டத்தினை நேர்மறையான நல்ல முறையிலே அணுகுகிறேன். அதனால் நான் கடினமாக உழைக்கிறேன். என் உழைப்பின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. மேலும், எனது திறமையினை பற்றி எனக்கு தெரியும் என் திறமையின் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

rashid-khan

மேலும், என்னால் 5 வகை லெக் ஸ்பின் வீசமுடியும். அதுவும் வெவ்வேறு ஸ்டைலில் மாறுபட்ட வேகத்திலும் என்னால் பந்துவீச முடியும். அதனாலே என்னால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். அதேபோன்று நான் இப்போது பேட்டிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறேன். அணிக்கு தேவைப்படும்போது இறங்கி ரன்களை குவிக்க ஆசைப்படுகிறன் என்று ரஷீத் கான் கூறினார்.

Advertisement