ஷான்வார்னேவின் பௌலிங்கை கிண்டல் செய்த ராஷித்கான்..!

rashidfunny
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சூழல் பந்து வீச்சாளராக இருந்து வருபவர் இளம் வீரர் ரஷீத் கான். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி பல பாராட்டுகளை பெற்ற ரஷீத் கான், சமீபத்தில் நடந்த இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஜின்கியா ரஹனேவை அவுட் செய்து தனது முதல் டெஸ்ட் விக்கெட்டையும் கைப்பற்றினர்.

rashidkhan

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ரஷீத் கான், தனக்கு இந்திய வீரர் கும்பலே மற்றும் பாகிஸ்தான் வீரர் அப்ரிடிதான் தனக்கு மிகவும் பிடித்த பந்துவீச்சாளர்கள் என்றும், தனக்கு ஆஸ்திரேலிய முன்னாள் பந்துவீச்சாளரான ஷேன் வார்னே பந்து வீச்சு தனக்கு சுத்தமாக பிடிக்காது என்று தெரிவித்துளளார்.

சமீபத்தில் ரஷீத் கான் ‘பிரேக் பாஸ்ட் வித் சாம்ப்பியன்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அப்போது தனது சிறுவயது கிரிக்கெட் அனுபவங்களை பற்றி தெரிவித்த போது ‘ ஆஸ்திரேலயா ‘ஷேன் வார்னே ஒரு ஒரு மிக பெரிய பந்துவீச்சாளர் தான், ஆனால் அவரை எனக்கு பிடிக்காது. குப்பிலே மற்றும் அப்ரிடியை தான் நான் பின்பற்றுகிறேன். அவர்களை போன்று ஷேன் வார்னே வேகமாக பந்துவீச மாட்டார்.’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபற்று அவர் தெரிவிக்கையில் ‘என்னுடைய குடும்பத்தில் இருக்கும் 4 வயது ஆகும் சின்ன பிள்ளை கூட சூழல் பந்து வீசும். நீங்கள் எப்படி பந்து வீச சொன்னாலும் அவர்கள் வீசுவார்கள் ‘ என்று தெறிவித்துள்ளார்.இதனால் ஷேன் வார்னேவை விட அவர்கள் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்று ரஷீத் கூறியுள்ளாரா என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement