ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளரான ரஷீத் கான் ,நடந்து வரும் ஐ.பி.எல் போட்டியில் ஹைதராபாத் அணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளராக விளங்கி வருகிறார். இதுவரை 15 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் நேற்று நடந்த போட்டியில் தோனியின் விக்கெட்டை கை பற்றி அனைவரயும் ஷாக்கடைய வைத்தார்.
Rashid right through MSD’s gates https://t.co/01PFpaXWIO
— PRINCE SINGH (@PRINCE3758458) 22 May 2018
நேற்று நடந்த முதல் தகுதி சுற்று போட்டியில் ஹைதராபாத்தை எதிர் கொண்ட சென்னை அணி தடுமாறி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 4 ஓவர்களை வீசிய ஹைதராபாத் அணியின் ரஷீத் கான் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதில் சென்னையின் தல தோனியின் விக்கெட்டும் அடங்கும். இந்த போட்டியில் ரஷீத் கான் வீசிய 7வது ஒவேரின் 4 வது பந்தை எதிர்கொண்ட தோனி, கண்ணிமைக்கும் நேரத்தில் பந்தை தவறிட்டதால் அது நேராக ஸ்டாம்பில் பாய்ந்தது.