
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த விராட் கோலி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் டி20 கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் பதவியை துறந்தார். அதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அறிவிக்கப்பட்டபோது பிசிசிஐ அவரது ஒருநாள் கேப்டன் பதவியை பறித்தது. இந்நிலையில் இவ்விரு கேப்டன் விலகலை தொடர்ந்து கடந்த 15-ஆம் தேதி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் தானாக முன்வந்து தனது விலகலை விராட் கோலி அறிவித்து அதிரடி காட்டியிருந்தார்.
இதன் காரணமாக பிசிசிஐ மற்றும் விராட் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் அதன் காரணமாகவே தற்போது டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் கோலி விலகி உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனாலும் கோலியின் இந்த முடிவை மதித்து பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணி வீரர்களான ரோகித் சர்மா, ராகுல், அஷ்வின் மற்றும் பும்ரா போன்றோர் கூட கோலியின் இந்த முடிவு தங்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும் அவரது முடிவை மதிப்பதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் விராத் கோலியின் கேப்டன் பதவி எப்போது போகும்? அவரது இடத்தை எப்போது பிடிக்கலாம் என ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோர் காத்திருந்ததாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதன்படி இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி இந்திய அணியை பொறுத்தவரை ஒரு நட்சத்திர வீரர். அவர் பதவி விலகியதை அடுத்து இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.
ஆனால் கோலியின் கேப்டன் பதவி எப்போது போகும், அவர் எப்போது விலகுவார் அப்போது நாம் அந்த இடத்தை பிடிக்கலாம் என்று ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் காத்திருந்ததாக எனக்கு தோன்றுகிறது. ரோகித் சர்மாவை பொறுத்தவரை கேப்டனாக அவரது உடல் தகுதி எந்த அளவிற்கு ஒத்துழைக்கும் என்பது தெரியாது. ராகுலுக்கு கேப்டன்சி திறமை கிடையாது. இதனால் கோலி பதவி விலகியதை அறிவித்தவுடன் இந்திய வீரர்களிடையே எதிர்வினையும் நான் பார்த்தேன்.
இதையும் படிங்க : காயத்திலிருந்து மீண்ட ரோஹித் சர்மா! எப்போது இந்திய அணிக்கு திரும்புகிறார்? – வெளியான ஹேப்பி நியூஸ்
கோலி மற்றும் கங்குலி ஆகியோருக்கு இடையே என்ன பிரச்சனை என்று எனக்கு தெரியாது. இருப்பினும் அந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்கக்கூடாது. விராட் கோலி போன்ற ஒரு பெரிய வீரர் உலகத்தில் கிடையாது. அவர் மீண்டும் பேட்டிங்கில் ரன் அடிக்கத் துவங்கும் போது அவரை சீண்டிய ஒவ்வொருவருக்கும் அவர் தனது பேட்டின் மூலம் பதிலடி கொடுக்கும் விதமாக அவரது இன்னிங்ஸ் ஒவ்வொன்றும் அமையும் என்று ரஷீத் லத்தீப் கூறியது குறிப்பிடத்தக்கது.