ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை குவித்தது.
பின்னர் 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியானது 21 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் கூறுகையில் :
இன்று இரவு என்னால் நன்றாக தூங்க முடியும் என்று நினைக்கிறேன். ஏனெனில் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 உலகக் கோப்பை தொடரின் போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நாங்கள் தோல்வியை சந்தித்தபோது நான் தூங்க முடியாமல் தவித்தேன். அன்று இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை.
மேக்ஸ்வெல் தனி ஒரு ஆளாக அப்படி ஒரு உணர்வை எங்களுக்கு தந்து விட்டார். ஆனால் இன்று நாங்கள் அதற்கு பதிலடி அளித்துள்ளோம். இன்றும் என்னால் மகிழ்ச்சியில் தூங்க முடியாது என்று நினைக்கிறேன். 2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற அணிக்கு எதிராக பெற்ற வெற்றி என்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.
இதையும் படிங்க : அவங்க மிஸ் பண்ணா என்னோட ஆதரவு இந்தியாவுக்கு தான்.. பண்ட்டுக்கு விருது வழங்கி வாழ்த்திய ரிச்சர்ட்ஸ்
இப்படிப்பட்ட ஒரு அணியை எங்களது தோல்வியை தோற்கடித்துள்ளதால் எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எங்களுடைய அணிக்கும் எங்களுடைய நாட்டிற்கும் இது ஒரு மிகப்பெரிய வெற்றி எனக்கு ரஷீத் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.
<.blockquote>



