தமிழக வீரர் சாய் கிஷோரிடம் இருந்து தான் நான் இதை எல்லாம் கத்துக்கிறேன் – ரஷீத் கான் பேட்டி

Rashid Khan
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை தாங்கள் விளையாடிய 8 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றுள்ள குஜராத் அணியானது 12 புள்ளிகளுடன் தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அதோடு அந்த அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவது ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.

சாய் கிஷோரின் இருந்து கற்றுக்கொள்கிறேன் : ரஷீத் கான்

இப்படி குஜராத் அணி அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றி பெற்று வருவதற்கு அந்த அணியின் பந்துவீச்சாளர்களும் ஒரு முக்கிய காரணமாக திகழ்கின்றனர். ஏனெனில் அந்த அணியில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றிருக்கும் வேளையில் பந்துவீச்சிலும் கலக்கும் ஒரு அற்புதமான யூனிட் இந்த ஆண்டு கிடைத்துள்ளது.

- Advertisement -

வேகப்பந்து வீச்சாளர்களாக சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா போன்ற சிறப்பான பந்துவீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சாளர்களாக ரஷீத் கான், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் என அற்புதமான கலவையில் அந்த அணி பந்துவீச்சு யூனிட்டை வைத்துள்ளது. இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து மோசமான பார்ம் காரணமாக தடுமாறி வந்த ரஷீத் கான் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் இருந்தார்.

ஆனால் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 4 ஓவர்களை வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் தான் தற்போது மீண்டும் இப்படி சிறப்பாக பந்துவீசுவதற்கு சாய் கிஷோர் கொடுத்த அறிவுரைகளும் காரணம் என ரஷீத் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாகவும் நானும் சாய் கிஷோரும் நிறைய பேசிக் கொள்கிறோம். அவரிடம் நான் எவ்வாறு பந்துவீச வேண்டும் என்பது குறித்த திட்டத்தை ஆலோசித்துக் கொள்வேன். அதேபோன்று அவரும் இந்தியாவில் உள்ள ஆடுகளத்தின் தன்மையை மிகச் சரியாக எனக்கு கூறி அதற்கு ஏற்றார் போல் எவ்வாறு பந்துவீச வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளையும் வழங்குகிறார். அவரிடம் இருந்து நான் அதனை கற்றுக் கொள்கிறேன்.

இதையும் படிங்க : நீங்க அதிருப்தியா இருப்பீங்கனு தெரியும்.. ஆனா வலுவான கம்பேக் கொடுப்போம் – ரசிகர்களுக்கு ஆறுதல் கூறிய காசி விஸ்வநாதன்

தற்போது அவரைப் போலவே நானும் சிறப்பாக பந்துவீச முயற்சிக்கிறேன். என்னுடைய அனுபவத்தையும் நான் அவரிடம் பகிர்ந்து கொள்கிறேன். அவரும் இந்திய ஆடுகளங்களில் எவ்வாறு பந்துவீச வேண்டும் என்பதை என்னிடம் பகிர்கிறார். அதிலிருந்து நல்ல அறிவுரைகளை எடுத்துக் கொள்கிறேன் என ரஷீத் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement