17 வயதில் நான் ஆப்கானிஸ்தான் அணிக்காக தேர்வாகி விளையாட இவர்தான் காரணம் – மனம்திறந்த ரஷீத்கான்

Rashid-khan
- Advertisement -

சமீபத்தில் தான் எப்படி ஆப்கானிஸ்தான் அணியில் தேர்வானவர் என்பது குறித்து ரஷித் கான் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். நான் ஆப்கானிஸ்தான் அணியில் தேர்வானத்திற்கு பின்பு ஒரு பெரிய கதையே இருக்கிறது என்றும் ரஷீத் கான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : எனக்கு அப்போது 17 வயசு என்னை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் ஆட வாய்ப்பளித்தது. முதலில் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை ஆட ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேக்கு கிளம்ப தயாராக இருந்தது.

rashid1

- Advertisement -

அப்பொழுது அணியின் பயிற்சியாளர் இன்சமாம் உல் ஹக் அணியில் ஒரு லெக் ஸ்பின்னர் கூட இல்லை , இந்த நிலையில் நாம் எப்படி கிளம்புவது என்று ஆவேசமாக பேசி இருக்கிறார். பின்னர் அவரிடத்தில் அணியில் இருந்த ஒருவர் ஒரு திறமைவாய்ந்த லெக்ஸ் பின்னர் இருக்கிறார் ஆனால் அவர் டி20 அணிக்கு ஆடவே தகுதி பெற்று இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். சற்று யோசித்து இன்சமாம் உல் ஹக் அவரை உடனே அழைத்து வாருங்கள் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கூறியதை தொடர்ந்து எனக்கு நள்ளிரவில் ஜிம்பாவே ஊருக்கு பயணம் செய்ய அழைப்பு வந்தது.

வந்த வேகத்தில் என்னை இன்சமாம் முதல் போட்டியில் ஆட வைக்கவில்லை என்னை சற்று காத்திருக்குமாறு கூறினார் நானும் சரி என்று கூறினேன். இன்னிலையில், முதல் போட்டி முடிவடைந்தது அதில் எங்களது ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இரண்டாவது போட்டிக்கான வலைப்பயிற்சியில் என்னை இன்சமாம் பந்துவீச அழைத்தார்.

Inzamam 1

எதிர்பாராத வண்ணம் அவரே லெக் கார்டு மாட்டிக்கொண்டு என்னை வந்து பந்துவீச சொன்னார் முதல் இரண்டு பந்துகளை அவர் ஆடிய நிலையில் 3வது பந்தை கட் செய்யாமல் கூக்லியாக வீச நினைத்தேன். நான் எதிர்பார்த்தது போலவே பந்து அவரது பேட்டை தாண்டி அவரது கார்டில் பட்டது.

அந்த பந்தின் முறைப்படி அவர் அவுட் இல்லை என்றாலும் அந்த பந்தை அவரால் தடுக்க முடியவில்லை. வலை பயிற்சி முடிந்ததும் நீ அடுத்த போட்டியில் களமிறங்க தயாராக இரு என்று கூறினார். அதில் தொடங்கி இன்று வரை ஆப்கானிஸ்தான் அணி என்னை நம்பி ஆடவைத்து கொண்டிருக்கிறது. இவை அனைத்திற்கும் முக்கிய காரணம் அவர்தான் என்று ரஷித் கான் கூறியிருக்கிறார்.

Advertisement