என்னடைய பிளான் இதுதான். சரியாக செய்து வருகிறேன் வெற்றிகளும் கிடைக்கின்றன – ரஷீத் கான் அதிரடி

Rashid-khan

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

SRHvsRCB

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 56 ரன்களையும், பின்ச் 32 ரன்களை குவித்தனர். அவர்களைத் தவிர மற்ற யாரும் சிறப்பாக விளையாடவில்லை. சன்ரைசர்ஸ் அணி சார்பாக ஹோல்டர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன் பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 24 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி அடுத்து டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

holder

இந்நிலையில் நேற்று போட்டி முடிந்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் கூறுகையில் : இந்த போட்டி மிகவும் கடினமாக இருந்தது. இருப்பினும் இறுதியில் வெற்றி பெற்ற அணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பஞ்சாப் அணிக்கு எதிராக நாங்கள் எவ்வாறு விளையாடினோமோ அதேபோன்று தவறு செய்யக்கூடாது என்பதால் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடினோம்.

- Advertisement -

நான் என்னுடைய பந்துவீச்சில் சரியான ஏரியாவில் பந்தை வீசினேன். மேலும் சரியான இடத்தில் பந்து வீசினால் தானாக விக்கெட்டுகள் விழும் என்பது என்னுடைய கருத்து. இதனாலேயே இந்த போட்டியில் அதே போன்று தொடர்ந்து வீசினேன். என்னுடைய பந்துவீச்சு இந்த மைதானத்தில் ஒத்துழைக்கிறது. அதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி வருகிறேன்.

Rashid

இது போன்ற முக்கியமான போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்வது சாதகமாக அமையும் என்று பலர் கூறி வருகின்றனர். ஆனால் இதுபோன்ற பிரஷர் ஆட்டங்களில் நிச்சயம் இரண்டாவது பேட்டிங் செய்வதே என்னை பொருத்தவரை சரியான முடிவு என்று ரசித் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.