இது நடந்தால் மட்டுமே என் திருமணம். அப்படினா உங்களுக்கு கல்யாணமே ஆகாது – ரஷீத் கானை கலாய்த்த ரசிகர்கள்

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியின் மிக முக்கிய வீரராக திகழுந்து வரும் இளம் வீரரான ரஷீத் கான் மிக இளம் வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்தார். அதாவது தன்னுடைய பதினெட்டாவது வயதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு அறிமுகமான ரஷித் கான் கிட்டத்தட்ட தற்போது 70 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 133 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

RashidKhan

- Advertisement -

மேலும் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகி மூன்றே ஆண்டுகளில் அவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு தலைமை தாங்கும் அளவிற்கு சென்றுவிட்டார். ஆம் இப்போது கேப்டனாக இருந்து வரும் ரசித்தான் 48 டி20 போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் 46 போட்டிகளில் விளையாடி 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தற்போது அவருக்கு 21 வயதுதான் ஆகிறது இந்நிலையில் அவர் தனது திருமணம் குறித்து தற்போது ரேடியோ ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் : ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையை வென்ற பிறகே தன்னுடைய திருமணம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு சமூகவலைதளத்தில் தற்போது ரசிகர்கள் அதிகளவில் பேசத் தொடங்கிவிட்டனர்.

RashidKhan

மேலும் தற்போது 21 வயதாகும் இவர் இனி தன் வாழ்வில் திருமணமே செய்ய முடியாது என்றும் கிண்டல் செய்து பதிவுகளை இட்டு வருகின்றனர். மேலும் ஒரு சிலர் திருமண பேச்சில் இருந்து அவர் தப்பிக்கவே இதுபோன்று பேசுகிறார் என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர். மேலும் ஒரு சிலர் அவருடைய வயதான தோற்றம் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு திருமணத்திற்காக ரஷீத் கான் காத்திருக்கிறார் என்றும் கிண்டலடித்தனர்.

எது எப்படி இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணி ஒரு சிறிய அணியாக இருந்து வந்தாலும் சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வருகிறது. வங்கதேச அணியை எவ்வாறு சாதாரணமாக அணியாக பார்க்கப்பட்டு பின்னர் வலிமையான அணியாக மாறியதோ அதேபோன்று ஆப்கானிஸ்தான் அணியும் வளர்ந்து வருகிறது. ஆனால் உலக கோப்பை என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்றாலும் அவரது முயற்சி பலராலும் பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Advertisement