நான் ஒரு சிறந்த பந்துவீச்சாளராக மாறியது இந்த தொடரால் தான் – மனம்திறந்த ரஷீத் கான்

Rashid
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த 22 வயதான இளம் சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் இதுவரை ஆப்கானிஸ்தான் அணிக்காக 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 140 விக்கெட்டுகளையும், 51 டி20 போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்டுகளையும், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் 2017 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் இவர் 69 போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Rashid

- Advertisement -

இப்படி உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் ரஷீத் கான் தனது கிரிக்கெட் கேரியரில் மாற்றத்தை கொண்டு வந்த ஒரு தொடர் குறித்து தற்போது பேசி உள்ளார். உலகின் மிக அபாயகரமான லெக் ஸ்பின்னராக விளங்கும் இவர் 2017 ஆம் ஆண்டு தனது பதினெட்டாவது வயதில் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக அறிமுகமானார்.

அதன் பிறகு தொடர்ந்து சன்ரைசர்ஸ் அணிக்காக முக்கிய வீரராக விளையாடி வரும் இவர் பல போட்டிகளில் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளார். இந்நிலையில் தனது கிரிக்கெட் கரியரில் ஏற்பட்ட மாற்றம் குறித்து பேசியுள்ள அவர் கூறுகையில் : நான் சர்வதேச போட்டிகளில் பெரிய அணிகளை எதிர்த்து விளையாடும் போது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் தான்.

rashid-khan

ஐபிஎல் தொடரின்போது நான் மிகப்பெரிய மாற்றம் அடைந்தேன். உலகின் பல்வேறு முன்னணி வீரர்களுக்கு எதிராக அப்போது பந்துவீசிய நான் என்னுடைய திறன், உடற்பகுதி மற்றும் மனதளவில் எவ்வாறு செயல்பட வேண்டும் என அனைத்தையும் ஐ.பி.எல் தொடரிலேயே தான் கற்றுக்கொண்டேன். அதுமட்டுமின்றி நான் சன்ரைஸ் அணியில் இருக்கும்பொழுது டாம் மூடி, விவிஎஸ் லட்சுமணன், முத்தையா முரளிதரன் ஆகியோருடன் உரையாடுவதால் நிறைய அனுபவங்கள் எனக்கு கிடைக்கிறது.

rashid

எனவே ஐபிஎல் தொடர் தான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று அவர் கூறியுள்ளார். ஐபிஎல் தொடருக்கு பின்னர் நான் ஒரு வித்தியாசமான பவுலராக மாறினேன் என்றும், பெரிய பெரிய வீரர்களுக்கு இடையே சிறப்பாக பந்துவீச ஐ.பி.எல் தான் உதவுகிறது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement