எதிர்கால இந்திய அணியின் சிறப்பான ஆல்ரவுண்டராக இவர் நிச்சயம் மாறுவார் – இளம்வீரரை பாராட்டிய ரஷீத் கான்

Rashid-khan
- Advertisement -

நேற்றுமுன்தினம் நடந்த 13 ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியால் 20 ஓவர் முடிவில் 120 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாருக்கான் மற்றும் கிறிஸ் கெயில் 22 ரன்கள் குவித்தனர். ஹைதராபாத் அணி பவுலர்களைப் பொறுத்தவரையில் கலீல் அஹமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

srh vs pbks

- Advertisement -

இளம் வீரர் அபிஷேக் வர்மா 2 விக்கெட்டுகளையும் நட்சத்திர வீரர் ரஷீத் கான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். அதன் பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணி பஞ்சாப் நிர்ணயித்த இலக்கை 18.4 ஓவரில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் ஹைதராபாத் அணியின் முதல் வெற்றி இதுவாகும்.
ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வார்னர் 37 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

அதன் பின்னர் பேர்ஸ்டோ 67 ரன்கள் மற்றும் கேன் வில்லியம்சன் 16 ரன்கள் அடிக்க ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்தவுடன் சன் ரைசர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் சக அணி இளம் வீரரான அபிஷேக் சர்மாவை புகழ்ந்து பேசியுள்ளார்.

Abhishek

அபிஷேக் சர்மாவை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவரிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. அவருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டால், அதை அவர் நிரூபிப்பார். எனக்கு நம்பிக்கை இருக்கிறது பின்னாளில் அவர் பெரிய வீரராக வருவார். இந்திய அணிக்கு ஒரு தலைசிறந்த ஆல்-ரவுண்டராக அவர் வலம் வருவார் என இறுதியாக கூறி முடித்தார்.

abhishek 1

தற்போது உலக அளவில் சிறந்த ஸ்பின் பவுலர் யார் என்றால் அது ரஷீத் கான் தான். அவரே இவ்வாறு அபிஷேக் சர்மாவை புகழ்ந்து கூறியுள்ளது அனைவரையும் மிகப்பெரிய அளவில் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Advertisement