இந்தியாவிடம் தோற்றாலும் அதை மாற்றாததே வெற்றிக்கு காரணம்.. ஆஸியை வீழ்த்தியது பற்றி ரசித் கான் பேட்டி

Rashid Khan 3
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆப்கானிஸ்தான் சாதனை படைத்துள்ளது. ஜூன் 23ஆம் தேதி செயின்ட் வின்சென்ட் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் வெறும் 149 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் 51, ரகமனுல்லா குரூபாஸ் 60 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக பட் கமின்ஸ் ஹாட்ரிக் உட்பட 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ஆஸ்திரேலியாவை ஆரம்பம் முதலே துல்லியமாக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் அதிரடியாக விளையாடாமல் மடக்கி பிடித்தது. அதே வேகத்தில் 20 ஓவரில் 19.2 ஓவரில் ஆல் அவுட்டாக்கிய ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வரலாற்று வெற்றி பெற்றது.

- Advertisement -

வெற்றிக்கான காரணம்:
ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக குல்பதின் நைப் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வியை சந்தித்தும் பிளேயிங் லெவனை மாற்றாமல் சிறப்பாக விளையாடியதே இந்த வெற்றிக்கு காரணம் என்று ஆப்கானிஸ்தான் கேப்டன் ரசித் கான் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய நாட்டுக்கும் அணிக்கும் இது மிகப்பெரிய வெற்றி. இதைத்தான் நாங்கள் 2023 உலகக் கோப்பை உட்பட கடந்த 2 வருடங்களாக தவற விட்டோம். இந்த வெற்றியால் மகிழ்ச்சி. எங்கள் வீரர்களால் பெருமைப்படுகிறேன். அதே பிளேயிங் லெவலுடன் விளையாட முடிவெடுத்தது மிகவும் முக்கியமானதாக அமைந்தது. நாங்கள் எதிரணியின் பவுலிங் வரிசையை பார்த்து அதற்கு தகுந்தார் போல் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்தோம்”

- Advertisement -

“இந்த பிட்ச்சில் 140 ரன்கள் நல்ல ஸ்கோராகும். நல்ல துவக்கத்தை பெற்ற நாங்கள் நன்றாக ஃபினிஷிங் செய்யவில்லை. ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் நல்ல துவக்கத்தை கொடுத்தது. இந்த பிட்ச்சில் 130 ரன்கள் அடித்தால் கூட அதை கட்டுப்படுத்தக்க்கூடிய திறமையும் நம்பிக்கையும் எங்களிடம் இருக்கிறது. அது தான் இந்த அணியின் அழகாகும். எங்களது அணியில் ஆல் ரவுண்டர்களும் தேர்வுகளும் நிறைய இருக்கின்றன”

இதையும் படிங்க: அடுத்தடுத்த மேஜிக்.. டி20யின் மலிங்காவாக.. வேறு யாருமே செய்யாத 2 உலக சாதனை படைத்த கமின்ஸ்

“நல்ல அனுபவத்தை கொண்ட குல்பதின் சிறப்பாக பந்து வீசி இன்று அசத்தினார். டேவிட் வார்னரின் விக்கெட்டை எடுத்து முகமது நபி போட்டியை துவங்கியது நன்றாக அமைந்தது. இது எங்களுடைய நாட்டில் இருக்கும் மக்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த வெற்றியால் அவர்கள் பெருமையுடன் இருப்பார்கள் என்று சொல்வேன். அவர்கள் இந்த வெற்றியை கொண்டாடுவார்கள்” என்று கூறினார்.

Advertisement