அப்பா அம்மா இருவரையும் இழந்து தவிக்குறேன். கடந்த ஒன்றரை வருடம் மோசமான காலம் – உருகவைத்த ரஷீத் கான்

Rashid-khan
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 11 வது லீக் போட்டி நேற்று டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணிக்கும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது.

bairstow

- Advertisement -

துவக்க வீரர்களான வார்னர் 45 ரன்களும், பேர்ஸ்டோ 53 ரன்கள் அடித்து சிறப்பான துவக்கம் அளித்தனர். அதன்பிறகு மனிஷ் பாண்டே வழக்கம்போல் 3 ரன்களில் ஏமாற்ற இந்த போட்டியில் முதல் முறையாக சேர்க்கப்பட்ட வில்லியம்சன் 26 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ரன் குவிப்புக்கு காரணமாக திகழ்ந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 162 ரன்கள் என்ற நல்ல ரன்களை குவித்தது.

அதன்பிறகு 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே அடித்தது. இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி சார்பாக தவான் 34 ரன்களும், ரிஷப் பண்ட் 28 ரன்களும் அடித்தனர். சன்ரைசர்ஸ் அணி சார்பாக ரசித்கான் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Rashid

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் ரஷித் கான் கூறுகையில் : இந்தப் போட்டியில் நான் என் மீது அழுத்தத்தையும் செலுத்தவில்லை. இந்த போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். என்னுடைய மனநிலையை அமைதியாகவும் மிகுந்த போகஸ் உடனும் வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய விரும்பினேன். இந்த போட்டியில் சரியாக பந்துவீசி எனது ஆட்டத்தை ரசித்தேன். மேலும் இந்த போட்டியின் சற்று வேகத்தை முதல் பந்திலேயே கூட்டினேன்.

- Advertisement -

அப்பொழுதுதான் மைதானத்தின் தன்மையை என்னால் அறிய முடியும் என்றும் சரியாக கணித்து இந்த மைதானம் என்னுடைய பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும்படி வீசினேன். மேலும் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சரியான நேரத்தில் பந்து வீச வார்னர் எப்பொழுதும் என் மீது நம்பிக்கை வைத்து அணிக்காக என்ன தர முடியுமோ அதை உங்களால் சரியாக தரமுடியும் என்று கூறி என்னை பந்து வீசவைப்பார். கேப்டனின் வேண்டுகோளுக்கிணங்க நான் அதை சரியாக செய்தேன் என்று நினைக்கிறேன். மேலும் பந்து வீசுவதற்கு முன் நாங்கள் டிஸ்கஷன் செய்யும் பொழுதும் போட்டியின் அப்போதைய நிலையை பற்றி பேசுவோம்.

srh

இந்த ஒன்றரை வருடம் என்னுடைய வாழ்வின் மிக கடினமான காலமாக கருதுகிறேன். முதலில் என் தந்தையை இழந்தேன். அதன் பிறகு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு என் தாயையும் இழுந்தேன் அதிலிருந்து வெளிவர சில நாட்கள் பிடித்தது. என்னுடைய அம்மா எனது மிகப்பெரிய ரசிகை ஐபிஎல் தொடரில் அவர் மிகவும் ரசிப்பார்கள். நான் எப்பொழுதெல்லாம் ஆட்டநாயகன் விருதை பெறுகிறேனோ அன்றைய நாள் முழுவதும் என்னிடம் அவர் பேசுவார்கள் என்று தனது சோகமான பின்னணியை ரஷீத் கான் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement