எனது வாழ்நாளில் மறக்கமுடியாத ஐ.பி.எல் போட்டி என்றால் அது இதுதான் – மனம்திறந்த ரஷீத் கான்

Rashid

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் மிக இளம் வயதிலேயே கிரிக்கெட்டில் அறிமுகமாகி தற்போது வரை உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு தனது 17 வயதில் கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமான ரஷீத் கான் தற்போது 22 வயதிலேயே புகழின் உச்சத்தில் உள்ளார். ஐபிஎல் தொடர்களில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் எதிர்கொள்ள கடினமான பவுலர் என்று கருதப்படும் பந்துவீச்சாளராக ரஷீத் கான் திகழ்கிறார்.

rashid-khan

2017 ஆம் ஆண்டு முதல் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் தற்போது தான் விளையாடிய ஐபிஎல் போட்டிகளில் மறக்கமுடியாத போட்டி என்று ஒரு போட்டியை குறிப்பிட்டு பேசியுள்ளார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 2-வது தகுதி சுற்று போட்டியில் விளையாடிய முக்கியமான அந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடியது.

- Advertisement -

அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்பதால் இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடினார். முதல் இன்னிங்சில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி ஒரு கட்டத்தில் ரன் குவிக்க தடுமாறிய நிலையில் பின் வரிசையில் வந்த ரஷீத் கான் 36 ரன்கள் குவித்து மிகப்பெரிய இலக்கை அடைய வழி வகுத்தார். அதுமட்டுமின்றி பந்துவீச்சின் போதும் சிறப்பாக பந்து வீசிய அவர் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட் எடுத்து அசத்தினார்.

rashid khan

அந்த 3 விக்கெட்டுகளும் ராபின் உத்தப்பா, ரசன், க்றிஸ் லின் ஆகிய மூன்று பெரிய விக்கெட்டுகள் அந்த போட்டி முடிந்து அவருக்கு “மேன் ஆப் தி மேட்ச்” விருதும் வழங்கப்பட்டது. இந்த போட்டியை தான் ரஷீத் கான் தனது வாழ்நாளில் மறக்க முடியாத போட்டி என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் அந்த போட்டியை விளையாடியதை என்னால் மறக்கவே முடியாது. ஏனெனில் இன்றளவும் எனக்கு அந்த போட்டி நன்றாக நினைவு இருக்கிறது.

- Advertisement -

அந்த போட்டியின் போது பேட்டிங்கிலும் சரி, பவுலிங்கிலும் சரி நான் எனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அன்றைய போட்டியில் வெற்றி பெற்ற பிறகு அன்று இரவு முழுவதும் உற்சாகமாக இருந்தேன். என் வாழ்நாளில் அப்படி ஒரு உற்சாகமான இரவு இருந்ததே கிடையாது. அந்த போட்டி தான் நான் பங்கெடுத்ததிலேயே சிறந்த ஐபிஎல் போட்டியாக பார்ப்பதாக ரஷீத் கான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement