தோனியை பற்றி ஒருவார்த்தையில் பதில் சொல்ல முடியாது – ரசிகர்களின் மனதை வென்ற ரஷீத் கான் அளித்த பதில்

Rashid

இந்தியாவில் நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது நாடுகளுக்கு திரும்பி அடுத்தடுத்த தொடர்களுக்காக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா காரணமாக வீரர்கள் தங்களது வீடுகளுக்குள் அடைந்து இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Rashid

இதன்காரணமாக கிடைத்திருக்கும் இந்த ஓய்வை சமூக வலைதளம் மூலமாக தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதன்படி ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கும் அவர்கள் சமூக வலைதளம் வாயிலாக பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான ரஷீத் கானிடம் ரசிகர்கள் தங்களது தொடர்ச்சியான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.

- Advertisement -

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வரும் ரஷீத் கான் இந்திய வீரர்கள் குறித்தும் தனது கருத்தினை வெளிப்படுத்திக் கொண்டார். அதில் விராத் கோலி, யுவ்ராஜ் சிங், தோனி ஆகியோர் குறித்து ஒற்றை வார்த்தையில் பதில் அளிக்கும்படி ஒரு ரசிகர் கேட்டுக்கொண்டார்.

Rashid-Khan

அதற்கு பதிலளித்த ரஷித் கான் விராத் கோலி குறித்து ஒரு வார்த்தையில் கூறுகையில் “கிங்கோலி” எனவும், யுவராஜ்சிங் குறித்து ஒரு வார்த்தையில் பதிலளிக்கையில் “சிக்சர் மன்னன்” என்றும் குறிப்பிட்டார். ஆனால் தோனி குறித்து ஒரு வார்த்தையில் பதில் அளிக்க கேட்ட ரசிகருக்கு ரஷீத் கான் பதிலளிக்கையில் : “அவரை வர்ணிக்க ஒரு வார்த்தை போதாது” என்று பதிலளித்து ரசிகர்களின் நெஞ்சத்தை அள்ளினார்.

- Advertisement -

Dhoni

மேலும் கடந்த கால கிரிக்கெட்டில் யாருக்கு பந்துவீச்சு ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக பந்துவீச தான் ஆசைப்படுவதாக ரஷீத் கான் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் பீட்டர்சன் மற்றும் ரோகித் சர்மாவின் புல்ஷாட் மிகவும் அருமையாக உள்ளது எனவும் ரஷித் கான் தனது கருத்தை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement