இந்திய வீரரான அவருக்கு எதிராக பந்துவீசுவது உண்மையிலேயே ரொம்ப கஷ்டம் – ரஷீத் கான் ஓபன்டாக்

Rashid
- Advertisement -

இம்மாத ஆரம்பத்தில் துவங்கிய ஐசிசி-யின் டி20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்த வேளையில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஏற்கனவே குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்திருந்த இந்திய அணி அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது. இந்நிலையில் சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி இன்று இரவு 8 மணிக்கு ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

- Advertisement -

அரையிறுதிக்கு தகுதி பெற இந்த சூப்பர் 8 சுற்றில் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாட உள்ளதால் இந்த போட்டியில் நிச்சயம் விறுவிறுப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக பேசியுள்ள ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு எதிராக பந்து வீசுவது கடினமானது என்று தெரிவித்துள்ளார். இதுதான் தொடர்பாக பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

விராட் கோலிக்கு எதிராக பந்து வீசுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அவர் எப்போதும் ரன்களை குவிப்பதற்கும் உங்கள் மீது அழுத்தம் கொடுப்பதற்கும் யோசித்து மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடுவார். அதேபோன்று உலகத்தரம் வாய்ந்த அவர் எந்த பந்துவீச்சாளர் பந்து வீசினாலும் இடைவெளிகளை கண்டுபிடித்து அடிப்பதில் கைதேர்ந்தவர்.

இதையும் படிங்க : 4, 6, 4, 6, 6, 4.. ஒரே ஓவரில் 30 ரன்ஸ்.. 181 சேசிங்கில் அடித்து நொறுக்கிய இங்கிலாந்து.. வெ.இ 8 மேட்ச் வெற்றியை உடைத்து மிரட்டல்

அவருக்கு எதிராக பந்து வீசுவது நிச்சயம் எனக்கும் சவாலான ஒன்றுதான் என ரஷீத் கான் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த டி20 உலககோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகளில் சோபிக்க தவறிய அவர் இந்த சுற்றில் அற்புதமாக விளையாடுவார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Advertisement