உலகமே எங்களை திரும்பிப்பார்க்கும் வகையில் நாங்கள் 2023 ல் இந்த சாதனையை நிகழ்த்துவோம் – சிரிப்பு காட்டிய ரஷீத் கான்

afganteam
- Advertisement -

போர் மேகமும், கலவரங்களும் சூழ்ந்த மத்திய ஆசியப் பகுதி ஆப்கானிஸ்தானாக நாடு. தற்போது வரை எந்தவிதமான முன்னேற்றமும் காணவில்லை. ஆசிய நாடுகள் சுதந்திரம் பெற்ற நூற்றாண்டுகளில் இந்த நாடு தீவிரவாத தாக்குதல்களில் சிக்கி தற்போதும் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

afghan

- Advertisement -

இந்த நாட்டில் இருந்து எந்தவித நாகரீக கால முன்னேற்றங்களும் பெரிதாக ஏற்படவில்லை. அப்படி ஒரு நாட்டில் இருந்து சர்வதேச அளவில் ஒரு கிரிக்கெட் அணியை உருவாக்கி இருக்கிறது. கடந்த பத்து வருடமாக டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறது. மேலும், கிரிக்கெட் அணி பதிவு செய்த 10 வருடங்களுக்குள்ளாக டெஸ்ட் போட்டிகளில் பங்கு பெற்ற முதல் அணி இதுதான் அந்த அளவிற்கு பல சாதனைகளை படைத்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ஆப்கானிஸ்தானில் இருந்து இரண்டு வீரர்கள் ஆடப் போகிறார்கள். ரஷித் கான் மற்றும் முகமது நபி ஆகியோர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி இருக்கின்றனர். இதில் ரஷித் கான், ரவிச்சந்திரன் அஸ்வின் நடத்திவரும் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர்..


.
டி20 உலகக் கோப்பை தொடரை நாங்கள் வென்றால் அது எங்களுக்கு மிகப்பெரிய சாதனையாக இருக்கும். எங்களிடம் திறமைக்கு பஞ்சமில்லை வேகப்பந்து வீச்சாளர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள். பேட்ஸ்மேன்கள் என அனைவரும் இருக்கின்றனர். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் எங்களுக்கு பெரிதாக அனுபவமில்லை.

இதனால்தான் முதல் டெஸ்ட் போட்டியில் தோற்று விட்டோம். ஒருவேளை நாங்கள் டி20 போட்டியில் உலக கோப்பை வென்றால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும். மேலும் உலகநாடுகளின் பார்வை எங்களது அணி மீது திரும்பும் என்று தெரிவித்திருக்கிறார் ரஷீத் கான். புள்ளிபட்டியலில் மிகவும் பின்தங்கி இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி காலிறுதிவரை முன்னேற ஆசைப்படலாம் ஆனால் உலகக்கோப்பை வெல்வதெல்லாம் முடியாத விடயம் என்று ரசிகர்கள் அவரது கருத்திற்கு பதிலளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement