ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்த – ரஷீத் கான்

Rashid
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் மாதம் துவங்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் தங்களது கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது t20 உலகக் கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது இந்த டி20 தொடருக்கான கேப்டனாக இளம் வீரர் ரஷீத் கான் நியமிக்கப்பட்டார்.

அவரது தலைமையில் இரண்டு மாற்று வீரர்கள் உட்பட 20 பேர் அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த அணியின் கேப்டன் ரஷீத் கான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

- Advertisement -

அவரது இந்த முடிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டனாக அறிமுகமான ரஷீத் கான் டி20 உலக கோப்பை தொடரிலும் கேப்டனாக சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் திடீரென ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rashid

இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலக என்ன காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உலக கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்படும் முன் ஒரு கேப்டனாக தேர்வு குழுவினர் தன்னிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் என்றும் ஆனால் அப்படி யாரும் என்னுடன் கலந்து ஆலோசிக்காமல் அணியை தேர்வு செய்துள்ளதார்கள்.

rashid1

அவர்களின் இந்த செயலாலே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக ரஷீத் கான் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் பதவி விலகியதை அடுத்து அணியின் சீனியர் வீரரான முகமது நபி கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement