தேடிவந்த கேப்டன் பதவியை மறுத்த ரஷீத் கான். காரணம் என்ன தெரியுமா ? – விவரம் இதோ

Rashid
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்காக மிக இளம் வயதிலேயே அறிமுகமான ரஷித் கான் கடந்த 6 ஆண்டுகளாக அந்த அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட துவங்கிய ரஷீத் கான் இதுவரை 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 140 விக்கெட்டுகளையும், 51 டி20 போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்டுகளையும், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

Rashid

- Advertisement -

அதுதவிர உலகெங்கிலும் நடைபெறும் டி20 போட்டிகளான ஐபிஎல், பிக்பாஷ், பங்களாதேஷ் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் என அனைத்திலும் பங்கேற்கும் ரஷித் கான் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் டி20 கேப்டன் பதவியை ரஷீத் கானுக்கு அணி நிர்வாகம் கொடுக்க முன்வந்தது. ஆனால் அதை அவர் நிராகரித்துள்ளார்.

அதனால் தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ஹஷ்மதுல்லா ஷாஹிதி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரஹ்மத் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் ஏன் கேப்டன் பதவியை விரும்பவில்லை என்பது குறித்து ரஷீத் கான் தற்போது கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

rashid-khan

நான் ஒரு சிறந்த வீரராக இருக்க விரும்புகிறேன். அதில் மட்டுமே தெளிவாக இருக்கிறேன் எனவே எனக்கு கேப்டன் பதவி வேண்டாம். துணை கேப்டன் பதவி என்பது எனக்கு சிறந்ததாக இருக்கும் ஏனெனில் என்னுடைய ஆலோசனை தேவைப்படும் போது அணிக்கு உதவியாக இருப்பேன். கேப்டன் பதவியில் இருந்து விலகி இருப்பதே என்னைப் பொருத்தவரை சிறந்தது என நான் கருதுகிறேன். ஏனெனில் கேப்டன் என்பதைவிட ஒரு வீரராக இருந்து நான் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்.

RashidKhan

கேப்டனாக அணியில் இருந்து மாறுபட்ட கோணத்தில் யோசிப்பதை விட எனக்கு அணியில் உள்ள பணியை ஒரு வீரராக செய்வது சிறந்தது என்று தோன்றுகிறது. அதுமட்டுமின்றி எப்போதும் அணியின் வெற்றிக்கு போராட வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறேன் அதனால் தான் நான் இந்த முடிவை எடுத்ததாக ரஷீத் கான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement