கேப்டனாக அறிமுகமான போட்டியிலே அசத்திய ரஷீத் கான். வரலாற்று சாதனை செய்து அசத்தல் – விவரம் இதோ

rashidwicket
- Advertisement -

வங்கதேசம் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் ஆஃப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 342 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 205 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்க்சில் ஆப்கானிஸ்தான் அணி 260 ரன்களில் ஆட்டமிழக்க வங்கதேச அணிக்கு 398 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

rashidkhan

கடினமான இலக்கை துரத்திய வங்கதேச அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் ஐந்தாவது நாள் தூக்கத்திலும் மழை குறுக்கிட்டதால் போட்டி உணவு இடைவேளை வரை நடக்கவில்லை. அதன் பிறகு வெறும் 13 பந்துகள் பேசப்பட்ட நிலையில் மீண்டும் மழையால் போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டது.

- Advertisement -

அதன் பிறகு கடைசி நாள் ஆட்டத்தில் வெறும் 18.3 ஓவர்கள் மட்டுமே விளையாடிய வங்கதேசம் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் சுழலில் 173 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 224 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. ரஷீத் கான் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Rashid

இந்த போட்டியில் ரஷீத் கான் மொத்தமாக 11 விக்கெட்டுகள் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் என 11 விக்கெட்டுகளையும், மேலும் ஒரு அரைசதம் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அறிமுக போட்டியில் வென்ற கேப்டன் என்ற சாதனை படைத்தார். மேலும் ஒரே போட்டியில் 10 விக்கெட் மற்றும் ஒரு அரை சதம் விளாசிய மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை ரஷீத் கான் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement