ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியானது நேற்று அக்டோபர் 8-ஆம் தேதி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த வங்கதேச அணியானது :
வரலாற்று சாதனையை நிகழ்த்திய ரஷீத் கான் :
ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 48.5 ஓவர்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே குவித்தது. பங்களாதேஷ் அணி சார்பாக அதிகபட்சமாக தவ்ஹீத் ஹிரிடாய் 56 ரன்களையும், மெஹதி ஹாசன் மிராஸ் 60 ரன்களையும் குவித்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஷீத் கான் மற்றும் அஸ்மத்துல்லா ஓமர்சாய் ஆகிய இருவரும் தலா மூன்று விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தியிருந்தனர்.
அதன் பின்னர் 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 47.1 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணி சார்பாக விளையாடிய அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் 38 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர் இந்த போட்டியில் எடுத்த முதல் விக்கெட்டின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வரலாற்று சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார்.
அப்படி அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஆப்கானிஸ்தான் அணி சார்பாக முதல் பந்துவீச்சாளராக அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதுதவிர்த்து சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த டிரென்ட் போல்டுடன் அந்த சாதனையை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க : 2 மாதங்களில் 20 கிலோ எடையை குறைத்த ரோஹித் சர்மா.. வியக்க வைத்த ஹிட்மேன் – இதுதான் பிளானா?
டிரென்ட் போல்ட் 107 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 200 விக்கெட்டுகளை எடுத்திருந்த வேளையில் தற்போது ரஷீத் கானும் 107 இன்னிங்ஸ்களில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் மிட்சல் ஸ்டார்க் 102 இன்னிங்ஸ்களில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிவேகமாக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



