- Advertisement -
உலக கிரிக்கெட்

அரையிறுதிக்கு முன்னேறியது மட்டுமில்லாமல் மற்றுமொரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ள ரஷீத் கான்

கிங்ஸ்டன் நகரில் நடைபெற்ற நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி தொடர்களில் முதல்முறையாக அரையிறுதி போட்டிக்கும் தகுதி பெற்று ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருந்தது.

வளர்ந்து வரும் அணிகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் அணி பெற்ற எந்த வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சியை அந்நாட்டு ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. அதேபோன்று எதிர்வரும் அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் முதல் முறையாக அவர்கள் இறுதிப் போட்டிக்கும் முன்னேற பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அதன் காரணமாக அந்த அரையறுதி போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடைசியாக நடைபெற்று முடிந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனான ரஷீத் கான் நான்கு ஓவர்களை வீசி 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

அவரது அந்த பந்துவீச்சு அந்த அணியின் வெற்றிக்கு வழி வகுத்ததோடு சேர்த்து அந்த நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தி அசத்தியுள்ளார். அது குறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ரஷீத் கான் படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகமான ரஷீத் கான் இதுவரை 92 போட்டிகளில் விளையாடி 152 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதையும் படிங்க : மழை வருவது தெரிந்தும் இந்தியா – இங்கிலாந்து செமி ஃபைனலுக்கு மட்டும் ரிசர்வ் டே ஒத்துக்காதது ஏன்? ஐசிசி ரூல்ஸ் இதோ

இந்த பட்டியலில் முதலிடத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக டிம் சவூதி 164 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், ஷாகிப் அல் ஹசன் 149 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இருப்பினும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக ரஷீத் கான் சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -