- Advertisement -
ஐ.பி.எல்

SRH vs CSK : சென்னை அணியை ஒரே ஓவரில் சுருட்டி போட்ட ரஷீத் கான் – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 33 ஆவது போட்டி இன்று ஐதராபாத் நகரில் 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமையிலான சென்னை அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துவக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டுப்ளிஸிஸ் ஆகியோர் விளையாடினர். இருவரும் சன் ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சினை அடித்து சிறப்பாக ரன்களை சேர்த்தனர் ஒரு கட்டத்தில் 10 ஓவர்களில் 79 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது சென்னை அணி.

அதன் பின்னர் ரஷீத் கான் 13 ஆவது ஓவரை வீச வந்தார். அப்போது முதல் பந்தில் ரெயினாவையும், நான்காவது பந்தில் ஜாதாவையும் ஒரே ஓவரில் எல்.பி. மூலம் வெளியேற்றி சென்னை அணியை முற்றிலுமாக சரித்தார். தோனி இல்லாத மிடில் ஆர்டர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாவிட்டாலும் போனாலும் கூட பரவாயில்லை. தாக்குபிடிக்காமல் கூட சுருண்டது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சன் ரைசர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை குவித்தது. இதனால் சன் ரைசர்ஸ் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்னையித்துள்ளது சென்னை அணி

- Advertisement -
Published by