வீடியோ : பால் வல்தாட்டி, கில்கிறிஸ்ட் சாதனை சமன் – ஐபிஎல் வரலாற்றில் 2 மாஸ் சாதனையுடன் உலக சாதனை படைத்த ரசித் கான்

Rashid Khan 79
- Advertisement -

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் மே 12ஆம் தேதி நடைபெற்ற 57வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத்தை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை 7வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை 80% சதவீதம் உறுதி செய்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 11 பவுண்டரி 6 சிக்சருடன் மைதானத்தின் 360 டிகிரியிலும் குஜராத் பவுலர்களை வெளுத்து வாங்கி தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்த நம்பிக்கை நாயகன் சூரியகுமார் எடுத்த 103* (49) ரன்களால் 20 ஓவரில் 218/5 ரன்கள் எடுத்தது.

மறுபுறம் பந்து வீச்சில் இதர குஜராத் பவுலர்கள் தடுமாறிய போதிலும் 4 ஓவரில் 30 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்த ரசித் கான் மீண்டும் தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 பவுலர் என்பதை நிரூபித்தார். ஆனால் 219 ரன்களை துரத்திய குஜராத்துக்கு சஹா 2, கில் 6, கேப்டன் பாண்டியா 4, அபினவ் மனோகர் 2, விஜய் சங்கர் 29 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 55/5 என சரிந்த அந்த அணியை காப்பாற்றுவார்கள் என்று கருதப்பட்ட டேவிட் மில்லர் 41 (26) ரன்களும் ராகுல் திவாடியா 14 (13) ரன்களும் எடுத்து போராடி ஆட்டமிழந்தார்கள்.

- Advertisement -

மாஸ் உலக சாதனை:
அதனால் 100/7 என சரிந்த குஜராத் குறைந்தது 80 – 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது குறுக்கே கௌஷிக் வந்ததை போல் மிரட்டிய ரசித் கான் ஆனதாகட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்ற வகையில் மும்பை பவுலர்களை டெத் ஓவர்களில் சரமாரியாக அடித்து நொறுக்கி துவம்சம் செய்தார். குறிப்பாக சூரியகுமார் யாதவ் பகவதி என்றால் நான் சின்ன பகவதி என்ற வகையில் பேட்டை சுழற்றி அட்டகாசமாக பேட்டிங் செய்து அரை சதம் கடந்த அவர் 3 பவுண்டரி 10 சிக்சருடன் 79* (32) ரன்கள் குவித்து தனி ஒருவனாக வெற்றிக்கு போராடினார்.

இருப்பினும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 20 ஓவர்களில் குஜராத்தை 191/8 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற மும்பை சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மாத்வால் 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஆனாலும் மோசமான தோல்வியிலிருந்து காப்பாற்றிய ரசித் கான் தொடர்ந்து குஜராத் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும் வகையில் ரன் ரேட்டை சரியா விடாமல் பார்த்துக் கொண்டதுடன் மும்பைக்கு கிடைக்க வேண்டிய கூடுதல் ரன் ரேட்டை சிதைத்து வெறும் வெற்றியை மட்டுமே கொடுத்தார்.

- Advertisement -

அப்படி மும்பையின் சொந்த ஊரில் 4 விக்கெட்களையும் 79* ரன்களையும் குவித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் எதிரணியின் சொந்த மைதானத்தில் 50+ ரன்களையும் 4 விக்கெட்களையும் எடுத்த 2வது வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் ரசிகர்களின் மனதில் இப்போதிலும் நிற்கும் பால் வல்தாட்டி கடந்த 2011இல் பஞ்சாப் அணிக்காக டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் மைதானத்தில் 75 (47) ரன்களும் 4/29 விக்கெட்களையும் எடுத்த முதல் வீரராக சாதனை படைத்தார்.

அதை விட டெயில் எண்டர்கள் ஆரம்பமாகும் 8வது இடத்தில் களமிறங்கி 79* ரன்கள் அடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் 8 அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையும் படைத்தார். அந்த பட்டியல்:
1. ரசித் கான் : 79*, குஜராத்துக்கு எதிராக, 2023
2. பட் கமின்ஸ் : 66*, மும்பைக்கு எதிராக, 2021
3. ஹர்பஜன் சிங் : 64, பஞ்சாப்புக்கு எதிராக, 2015

இதையும் படிங்க:வீடியோ : என் வாழ்வில் பார்த்த 1 கோடி பந்துகளில் இது இம்பாஸிபள் ஷாட் – சூர்யாவை வியந்து பாராட்டிய சச்சின், ஆஸி, வெ.இ ஜாம்பவான்

அது போக 10 சிக்ஸர்களை அடித்த அவர் ஐபிஎல் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக டி20 கிரிக்கெட்டில் 8 அல்லது கீழ் வரிசையில் களமிறங்கி ஒரு இன்னிங்ஸில் 10 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் படைத்துள்ளார். அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் மும்பைக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையும் சமன் செய்தார். அந்த பட்டியல்:
1. ரசித் கான் : 10, 2023*
1. ஆடம் கில்கிறிஸ்ட் : 10, 2008
2. வெங்கடேஷ் ஐயர் : 9, 2023*

Advertisement