ஐ.பி.எல் வரலாற்றில் யாரும் அசைக்க முடியாத சாதனையை செய்த ரஷீத் கான் – விவரம் இதோ

Rashid
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டி நேற்றுமுன்தினம் துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

SRHvsDC

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வார்னர் 34 பந்துகளில் 66 ரன்களையும், சஹா 45 பந்துகளில் 87 ரன்கள் குவித்தனர். அதன் பின்னர் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 19 ஓவர்களில் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே குவித்தது.

அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 36 ரன்களையும், ரஹானே 26 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக ரசித் கான் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகனாக விருத்திமான் சஹா தேர்வானார்.

Saha 2

இந்த போட்டியின் மூலம் சன் ரைசர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் டி20 வரலாற்றில் ஒரு முக்கிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அந்த சாதனை யாதெனில் அந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 7 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுமட்டுமின்றி மொத்தம் 4 ஓவர்களில் மொத்தமாக 17 டாட் பால்ஸை அவர் இந்த போட்டியில் வீசியுள்ளார்.

அதன் மூலம் ஒரே டி20 போட்டியில் அதிக பால்களை வீசிய பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஏற்கனவே நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் 4 ஓவர்கள் பந்துவீசி 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். ஆக மொத்தம் இந்த வருடம் டெல்லி அணிக்கு எதிராக மட்டும் 8 ஓவர்கள் பந்துவீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை இவர் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement