டி20 கிரிக்கெட்டில் மட்டுமல்ல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் வரலாற்று சாதனை நிகழ்த்திய ரஷீத் கான் – விவரம் இதோ

Rashid

ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்பொழுது நடைபெற்று முடிந்துள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கிடையில் தக்க பதிலடி கொடுக்கும் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி தற்போது நடந்து முடிந்துள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

afg

ரஷித் கான் என்றாலே அவரது மாயாஜால சுழற்பந்து வீச்சு தான் அனைவரது கண்முன் வந்து போகும்.ஆப்கானிஸ்தான் அணிக்காக அனைத்து வகை போட்டிகளிலும் ஆடிவரும் ரசித்தான் தற்போது நடந்த ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் தனது அதிரடி மாயாஜால சுழல் பந்துவீச்சை வெளிப்படுத்தி உள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத ரஷித் கான் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மொத்தம் அவர் 36.3 ஓவர்களை வீசி இருக்கிறார். அதில் 138 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதில் மூன்று மெய்டன் ஓவர்களையும் வீசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இன்னிங்சில் மொத்தமாக 62.5 ஓவர்களை வீசியிருக்கிறார். அதில் 137 ரன்கள் மட்டும் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் 17 மெய்டன் ஓவர்கள் வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rashid 1

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் முதல் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து மொத்தமாக வீசி உள்ள ஓவர்களின் எண்ணிக்கை 99.2 ஆகும்.இதற்கு முன் ஷேன் வார்னே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2002ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் 98 ஓவர்களை வீசி இருந்தார். 21 ஆம் நூற்றாண்டில் ஒரு தனி டெஸ்ட் போட்டியில் அதிக ஓவர்களை வீசிய வீரராக ஷேன் வார்னே இதுநாள் வரையில் இருந்தார்.

- Advertisement -

rashid 2

இந்நிலையில் ரஷித் கான் 99.2 ஓவர்களை வீசியதன் மூலம் ஷேன் வார்னேவை பின்னுக்குத் தள்ளி 21 ஆம் நூற்றாண்டில் அதிக ஓவர்களை வீசி வீரராக ரஷித் கான் புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்நிலையில் ரஷித் கானின் சாதனையை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் சோசியல் மீடியாக்களில் பாராட்டிக் கொண்டு வருகின்றனர்.