ரஷித் கான் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் இப்படி ஒரு சாதனையா ? இவர் சாதனையை முறியடிக்க முடியாது போல இருக்கே

rashidwicket
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பை தொடரில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியிருந்தனர். ஆனால் லீக் சுற்றில் அந்த அணி வெற்றி பெறாமல் வெளியேறியது. இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் மாற்றப்பட்டு இளம் வீரரான ரசித் கான் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

Rashid

- Advertisement -

தற்போது ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷ் சுற்றுப்பயணம் சென்று ஒரு டெஸ்ட் மற்றும் ஒரு முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்கிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று சிட்டகாங் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்த போட்டியில் ரஷீத் கான் பங்கேற்றதன் மூலம் நேற்று ஒரு வரலாற்று சாதனை இந்த போட்டியின் மூலம் படைத்தால். அது யாதெனில் டெஸ்ட் போட்டியில் இளம் வயதில் கேப்டனாக அணியை வழிநடத்திய வீரர் என்ற சாதனையை இதுவரை ஜிம்பாப்வே அணியை சேர்ந்த தைபு வைத்திருந்தார். 20 வயது 358 நாட்கள் என்ற வயதில் கேப்டனாக ஜிம்பாப்வே அணியை வழிநடத்தினார்.

rashidfirst

ஆனால் தற்போது ரஷீத் கான் 20 வயது 350 நாட்கள் என்ற வித்தியாசத்தில் இளம் வயதில் டெஸ்ட் கேப்டனாக அணிக்கு நியமிக்கப்பட்டு, அணியை வழிநடத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement