டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு – யார் தெரியுமா ?

- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு பெருகி வரும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்த டி20 உலக கோப்பை தொடரில் விளையாட அனைத்து அணிகளும் தங்களது அணிகளை தயார் செய்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த டி20 உலக கோப்பை தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அனைவராலும் கருதப்படும் அணியான ஆப்கானிஸ்தான் அணி தற்போது புதிய கேப்டனை நியமித்துள்ளது. அதன்படி அந்த அணிக்கு புதிய கேப்டனாக 22 வயதான ரஷீத் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் துணை கேப்டனாக நஜிபுல்லா நியமிக்கப்பட்டுள்ளார். டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரஷீத் கான் 51 டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 140 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

Rashid

அதுமட்டுமின்றி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமின்றி ஐபிஎல் தொடர்களில் சன்ரைசர்ஸ் அணிக்காகவும் விளையாடி வரும் ரஷித் கான் தனது பந்து வீச்சின் மூலம் உலகின் பல்வேறு முன்னணி வீரர்களை திணறடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Rashid

பந்துவீச்சில் மட்டுமின்றி இறுதி கட்டத்தில் பேட்டிங்கும் செய்யும் ரஷீத் கான் அதிரடியாக பேட்டிங் செய்து பவுண்டரிகளை அடிக்கக்கூடிய வீரராகவும் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement