ரஷீத் கான் மற்றும் டேனியல் வியாட் இருவரும் வாழ்த்து பகிர்ந்துகொண்டனர் – காரணம் இதுதான் !

daniel
- Advertisement -

உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் முதல் மூன்று போட்டிகளில் தொடர்ந்து தோற்ற ஆப்கானிஸ்தான் அணி பின்னர் தோல்வியிலிருந்து மீண்டு சிறப்பாக விளையாடி 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதிபெற்றது.

rashid1

- Advertisement -

இந்நிலையில் உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் இறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி மேற்கிந்திய தீவுகள் அணியை வென்று அசத்தியுள்ளது.

19வயது மட்டுமேயான ஆப்கானிஸ்தான் வீரரான ரஷீத்கான் சர்வதேச போட்டிகளில் விரைவாக 100 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற புதிய உலகசாதனை படைத்துள்ளார்.
wyatt

மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட்கீப்பரான சாய் ஹோபின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ரஷீத்கான் இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.மற்றொருபுறம் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி வீரரான டேனியல்லி வியாட் இந்தியா – ஆஸ்திரேலியா – இங்கிலாந்து முத்தரப்பு தொடரில் இந்தியாவுக்கெதிரான டி20 போட்டியில் சதமடித்து அசத்தினார்.

இந்தியா நிர்ணயித்த 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி இலகுவாக வெற்றிபெற டேனியல்லி வியாட்டின் சதம் காரணமாக அமைந்தது.இந்த வெற்றியின் மூலம் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கும் இங்கிலாந்து அணி தகுதிபெற்றுள்ளது.

இந்நிலையில் தான் சமூகவலைத்தளமான டிவீட்டரில் ரஷீத்கானின் உலகசாதனையை பாராட்டி டேனியல்லி வியாட்டும், டேனியல்லி வியாட்டின் சதத்தை பாராட்டி ரஷீத்கானும் மாற்றி மாற்றி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளனர்.தற்போது இந்த இருவரது டிவீட்களும் இவர்களின் ரசிகர்களால் அதிகளவில் ரீடிவீட் செய்யப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement