ரஞ்சிக் கோப்பை: 172 ரன்ஸ்.. சுதர்சன் – ஜெகதீசன் அபாரம்.. சௌராஷ்ட்ராவை பந்தாடும் தமிழ்நாடு முன்னிலை

Ranji Trophy
- Advertisement -

இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் தொடரான ரஞ்சிக் கோப்பையின் 2024 – 25 சீசன் அக்டோபர் 11ஆம் தேதி துவங்கியது. அதில் கோயம்புத்தூரில் உள்ள எஸ்என்ஆர் காலேஜ் கிரிக்கெட் மைதானத்தில் எலைட் குரூப் டி பிரிவில் இடம் வகிக்கும் தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதும் போட்டி துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்ட்ரா முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஹார்விக் தேசாய் 0, ராணா 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் புஜாரா தம்முடைய ஸ்டைலில் நிதானமாக விளையாடி நங்கூரத்தை போட முயற்சித்தார். ஆனால் அவரை 16 ரன்களில் தமிழக கேப்டன் கிளீன் போல்ட்டாக்கினார்.

- Advertisement -

பவுலிங் அசத்தல்:

மற்றொரு துவக்க வீரர் ஜானியை 34 ரன்களில் அவுட்டாக்கிய முகமது அடுத்து வந்த செல்டன் ஜாக்சனை 21 ரன்களில் பெவிலியன் அனுப்பினார். அதனால் 88-5 என தடுமாறிய சௌராஷ்ட்ரா அணிக்கு மிடில் ஆர்டரில் வசவடா நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் பிரேரக் மன்கட் 20, கேப்டன் ஜெய்தேவ் 21 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் வசவடா 62* ரன்கள் எடுத்துப் போராடியும் சௌராஷ்ட்ராவை 203 ரன்களுக்கு தமிழ்நாடு ஆல் அவுட்டாக்கியது.

தமிழ்நாடு அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சாய் கிஷோர், சோனு யாதவ், முகமது தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு துவக்க வீரர்கள் சாய் கிஷோர் – ஜெகதீசன் ஆகியோர் ஆரம்ப முதலே சௌராஷ்டிரா பவுலர்களுக்கு சவாலைக் கொடுத்தனர். குறிப்பாக சொந்த மண்ணில் அந்த ஜோடி சூழ்நிலைகளை உணர்ந்து விளையாடியது.

- Advertisement -

முன்னிலையில் தமிழ்நாடு:

அந்த வகையில் 172 ரன்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து தமிழ்நாடு அணிக்கு அபாரமான ஓப்பனிங் கொடுத்த அந்த ஜோடியில் இருவருமே அரை சதமடித்தனர். நேரம் செல்ல செல்ல அசத்தலாக விளையாடிய அந்த ஜோடியில் சதமடிப்பார் என்று பார்க்கப்பட்ட சாய் சுதர்சனை 82 ரன்களில் புஜாரா ரன் அவுட்டாக்கினார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஜெகதீசன் 11 பவுண்டரியுடன் சதமடித்து 100 ரன்களில் உனட்கட் வேகத்தில் அவுட்டாக்கினார்.

இதையும் படிங்க: ரோஹித்துக்கு அடுத்து டெஸ்ட் கேப்டனாக தகுதி பும்ராவிடம் தான் இருக்கு.. அதற்கு காரணம் இதுதான் – விவரம் இதோ

அதைத் தொடர்ந்து பிரதோஷ்பால் மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடினர். அதில் பாபா இந்திரஜித் 40 ரன்கள் எடுத்திருந்த போது உனட்கட் வேகத்தில் அவுட்டானதுடன் 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தற்போதைய நிலையில் 278-3 ரன்கள் குவித்துள்ள தமிழ்நாடு அணி சௌராஷ்டிராவை விட 75 ரன்கள் முன்னிலையுடன் இப்போட்டியில் நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது. களத்தில் பிரதோஷ் பால் 45*, பூபதி குமார் 0* ரன்களுடன் உள்ளனர்.

Advertisement