கங்குலியிடம் நேரில் பேசி அந்த தொடரை நடத்தி காட்டுவேன். ரசிகர்களுக்கு நற்செய்தி – கலக்கும் ரமீஸ் ராசா

Ramiz-raja
- Advertisement -

கிரிக்கெட்டின் பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிகள் என்றாலே அதில் அனல் பறக்கும் என்பதால் அதற்கு இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களிடம் எப்போதுமே தனி மவுசு உள்ளது. இருப்பினும் பக்கத்து பக்கத்து நாடுகளாக இருக்கும் இவ்விரு நாடுகளுக்கிடையே நிலவும் தீவிரவாத எல்லைப் பிரச்சனைகள் காரணமாக கடந்த பல வருடங்களாக இவ்விரு அணிகளும் ஒரு நேருக்கு நேர் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்காமல் இருந்து வருகிறது.

INDvsPAK

- Advertisement -

அதே சமயம் ஐசிசி நடத்தும் உலக கோப்பை போன்ற கிரிக்கெட் தொடர்களில் மட்டும் வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாய் மோதி வருகின்றன. அது போன்ற உலகக்கோப்பை போட்டிகள் கூட இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 நாட்டு மண்ணில் நடக்காமல் பொதுவான இடத்தில் நடந்தால் மட்டுமே அதில் விளையாடுவோம் என்பது போல் இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அடம் பிடிக்கின்றன.

உலககோப்பையில் இந்தியா – பாகிஸ்தான்:
இதன் காரணமாக தற்போதெல்லாம் இந்தியா-பாகிஸ்தான் ஒரு கிரிக்கெட் போட்டியில் மோதுவதை பார்க்க வேண்டுமென்றால் அதற்கு ஐசிசி நடத்தும் உலக கோப்பைக்காக ரசிகர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. பொதுவாகவே உலகக் கோப்பை என்பது 2 அல்லது 4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.

INDvsPAK

அப்படிப்பட்ட நிலையில் இந்த இரு அணிகள் மோதும் போட்டிகளைப் பார்க்க வேண்டுமென்றால் தற்போது குறைந்தது ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய பரிதாப நிலைமை ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த இரு நாடுகள் மோதும் கிரிக்கெட் தொடர்களை நடத்துவதற்காக சமீப காலங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் நடத்திய அத்தனை பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் தான் முடிந்தது. மொத்தத்தில் ஐசிசி உலக கோப்பை அல்லது ஆசிய கோப்பை ஆகிய 2 தொடர்களை தவிர்த்து இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதை பார்க்க முடியாது என்ற நிலைமை உருவாகியுள்ளது.

- Advertisement -

4 நாடுகள் தொடர்:
அந்த நிலையில் தற்போதைய தேதியில் உலக அளவில் 4 தரமான கிரிக்கெட் அணிகளாக விளங்கும் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் மோதும் புதிய நாற்தரப்பு கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு ஐசிசியிடம் அனுமதி கேட்க உள்ளதாக கடந்த மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா தெரிவித்திருந்தார். ஆனால் அது போன்ற எந்த ஒரு அனுமதியையும் அவர் கேட்கவில்லை என ஐசிசி தரப்பு அதன்பின் தெரிவித்திருந்தது.

Ramiz Raja Sourav Ganguly

மேலும் ரமீஸ் ராஜா கூறும் இந்தத் திட்டம் வேலைக்கு ஆகாது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார். இதனால் அது போன்ற ஒரு கிரிக்கெட் தொடர் நடத்துவதற்கான முயற்சி தோல்வி அடைந்ததாக அனைவரும் கருதினர். இந்நிலையில் ஏற்கனவே கூறியது போல இந்தியா – பாகிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகள் மோதும் புதிய கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலியிடம் பேச உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமேஷ் ராஜா மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

- Advertisement -

விளையாட்டு அரசியல் அல்ல:
இது பற்றி அளித்த பேட்டி ஒன்றில் அவர் பேசியது பின்வருமாறு. “விரைவில் துபாயில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மீட்டிங் நடைபெறும் போது இதுபற்றி சௌரவ் கங்குலியிடம் நான் கண்டிப்பாக பேசுவேன். நாங்கள் இருவருமே கேப்டனாக செயல்பட்டு எங்கள் நாட்டுக்காக விளையாடியவர்கள். எனவே எங்களைப் பொறுத்தவரை கிரிக்கெட் என்பது அரசியலை பொருத்தது கிடையாது. ஒருவேளை எனது இந்த திட்டத்திற்கு இந்தியா சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் கூட பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 3 நாடுகள் மோதும் முத்தரப்பு தொடரை கண்டிப்பாக நடத்துவோம்” என கூறினார்.

indvspak

பொதுவாகவே விளையாட்டில் அரசியல் செய்யக்கூடாது என்ற ஒரு கருத்து உள்ளது. அதை கையில் எடுத்துள்ள ரமீஷ் ராஜா விரைவில் துபாயில் நடைபெறும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகள் மோதும் கிரிக்கெட் தொடரை நடத்துவது பற்றி பேசி நல்ல முடிவு எடுப்பேன் என தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்தியா சம்மதம் தெரிவிக்க விட்டாலும் கூட இந்தியாவை தவிர்த்து விட்டு அந்த தொடரை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவேன் என அவர் கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில் சௌரவ் கங்குலி என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஒருவேளை அதுபோன்ற ஒரு கிரிக்கெட் தொடர் நடந்தால் உண்மையாகவே இந்திய ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மேலும் ஆசிய கோப்பை 2022 தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு வரும் என ரமீஸ் ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்

Advertisement