இந்திய அணியை சேர்ந்த இந்த 4 வீரர்களும் ஜிம்மிற்கு வந்தாலும் சாதாரண உடற்பயிற்சியை மட்டுமே செய்வார்கள் – உடற்பயிற்சியாளர் ஓபன் டாக்

IND-1
- Advertisement -

தோனி தலைமையிலான இந்திய அணி 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியது. அந்த தொடரில் இந்திய அணியின் உடற்பயிற்சியாளர் ஆக இருந்தவர் ராம்ஜி ஸ்ரீனிவாசன். இவரின் பயிற்சி காலகட்டத்தில் இந்திய அணிக்கு சிறப்பான உடற்பயிற்சியை வழங்கி வீரர்களை சிறப்பான உடற்தகுதியுடன் வைத்திருந்ததும் அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம். ஏனெனில் நல்ல உடற்தகுதியுடன் இருக்கும் ஒருவீரர் தனது சிறப்பான பீல்டிங் மூலம் எதிரணிக்கு அழுத்தத்தை கொடுக்கமுடியும்.

- Advertisement -

மேலும் வீரர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க உடற்தகுதியை எப்போதும் சிறப்பாக வைத்திருப்பது அவசியம் என்றும் அதற்காக கடும் பயிற்சிகளையும் வீரர்களுக்கு தொடர்ச்சியாக அளித்து வந்தார். நாம் பார்த்தவரை 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின்னர் இந்திய வீரர்கள் அதிக அளவில் ஃபிட்னஸ்க்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். அந்த நேரத்தில் இருந்து இந்திய அணியின் உடற்தகுதி முக்கிய ஒன்றாக பார்க்கப்பட்டது.

அதன்பிறகு இந்திய அணி தற்போது உடற்தகுதியில் வேறலெவலில் உள்ளது. அதிலும் குறிப்பாக தற்போது உள்ள இளம் இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்களது ஃபிட்னஸ்ஸை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். தற்போதுள்ள இந்திய அணி மொத்தமாக சிறந்த தகுதியுடன் இருக்கும் வீரர்களை கொண்டது. அதே போன்று 2013 ஆம் ஆண்டு இந்திய அணி உடற்பயிற்சியை மேற்கொண்ட போது ஏற்பட்ட சில விடயங்களை தற்போது ராம்ஜி ஸ்ரீனிவாசன் பகிர்ந்துள்ளார்.

Ramji

அதன்படி அவர் கூறுகையில் : அப்போதுள்ள வீரர்களில் சச்சின், சேவாக், தோனி, ரோகித் என யாரும் வெயிட் லிப்டிங் உடற்பயிற்சிகளை செய்ய மாட்டார்கள். உடலை முறுக்கேற்றும் அந்த வெயிட் லிப்டிங் பயிற்சிகள் அவர்களுக்கு தேவையில்லை என்றும் சீராக உடல் திறனை வைத்திருக்கும்படி சாதாரணமான தினசரி உடற்பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் தினமும் இந்திய வீரர்கள் ஜிம்முக்கு வருவார்கள். ஆனால் அவரவர் உடலுக்கு தேவையான சாதாரணமான உடற்பயிற்சியை, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் பயிற்சியை மட்டும் செய்ர் வார்கள் அதிலும் குறிப்பாக யுவராஜ் ரோஹித் போன்றவர்கள் பெரிய சிக்ஸ் அடிக்க கூடிய வீரர்கள் அவர்கள் தங்களது கால்களுக்கும் தோள்பட்டைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பயிற்சிகளை மேற்கொள்பவர்கள்.

fitness

அதேபோன்று ஜாஹீர் கான் முதுகு மற்றும் தொடைப்பகுதியில் காயம் ஏற்படாதவாறு இருக்க பயிற்சிகளை மேற்கொள்வார் என்று தெரிவித்துள்ளார். மேலும் டோனி ஜிம்மிற்கு வரும் முன்னரே அவர் நல்ல உடல் தகுதியுடன் இயல்பாகவே நல்ல கட்டு மஸ்தான உடல் அமைப்பைக் கொண்டவர். எனவே அவர் பெரிய அளவில் வெயிட் லிப்டிங் செய்யமாட்டார். தினசரி செய்யும் தொடர்ச்சியான தினசரி பயிற்சிகளை மட்டும் அவர் செய்வார் என்று ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார்.

ஆனால் தற்போது உள்ள இந்திய அணியை பார்த்தால் முற்றிலும் மாறுபட்டு உடலில் உள்ள அனைத்து பகுதிகளையும் பலமாக வைத்திருக்கும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கோலி, ஐயர், ராகுல், ஜடேஜா, பாண்டியா, பும்ரா மற்றும் கில் என அனைவருமே சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் வெயிட் லிப்டிங் உடற்பயிற்சியும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement