நாங்க அந்த தப்பு செய்யல, இதனால் தான் ஆசிய கோப்பையை இந்தியா ஜெயிக்கல – ரமீஸ் ராஜா கருத்து

Ramiz-Raja
Advertisement

விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கு முன்னோட்டமாகவும் தயாராகும் வகையிலும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற வரலாற்றின் 15வது ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டிகளாக நடைபெற்றது. அதில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாகவும் நடப்புச் சாம்பியனாகவும் எதிரணிகளை காட்டிலும் உலகத் தரமான வீரர்களை கொண்ட வலுவான அணியாகவும் களமிறங்கிய இந்தியா எளிதாக கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் லீக் சுற்றில் அசத்திய இந்தியா வழக்கம்போல அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் சொதப்பி பைனலுக்கு கூட தகுதி பெறாமல் ரசிகர்கள் அதிர்ச்சியடையும் வகையில் வெளியேறியுள்ளது. இதனால் இங்கேயே கோப்பையை தக்க வைக்காத இந்தியா ஆஸ்திரேலியாவுக்குச் சென்று எங்கே உலக கோப்பையை வெல்லப்போகிறது என்ற கவலையும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Bhuvneswar Kumar INDIA

இந்த தொடரில் கேஎல் ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் வெளிப்படுத்திய சொதப்பலான ஆட்டங்களை விட தவறான அணி தேர்வு, சுமாரான கேப்டன்ஷிப் போன்ற குளறுபடியான அம்சங்களே தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அதிலும் தேர்வு செய்யாத வீரர்களை சரியாக பயன்படுத்தாத கேப்டனும் அணி நிர்வாகமும் ரவீந்திர ஜடேஜா காயமடைந்ததற்காக செய்த தேவையற்ற மாற்றங்களே தோல்வியை ஆரம்பித்து வைத்தது எனலாம். ஏனெனில் லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை வென்றபின் காயத்தால் வெளியேறிய ஜடேஜாவுக்கு பதில் தீபக் ஹூடாவை மட்டும் சேர்க்கவேண்டிய கேப்டன் ரோஹித் சர்மா சம்பந்தமில்லாமல் வெறும் ஒரு பந்தை மட்டுமே எதிர்கொண்டிருந்த தினேஷ் கார்த்திக்கை நீக்கினார்.

- Advertisement -

தேவையற்ற மாற்றங்கள்:
அந்த மாற்றத்தை நிகழ்த்தியதுமே சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து இந்தியா வெளியேறியது. அந்த தோல்விகளுக்கு 15 – 20 ரன்கள் குறைவாக இருந்த நிலையில் அதை அடிக்கக்கூடிய தினேஷ் கார்த்திக்க்கு பதில் சேர்க்கப்பட்ட ரிஷப் பண்ட் வழக்கம் போல சொதப்பி அணி நிர்வாகத்தின் முடிவை தவறென்று நிரூபித்தார். அதே போல் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ரவி பிஷ்னோய் இலங்கைக்கு எதிரான போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டார்.

Bhuvneshwar Kumar

மொத்தத்தில் தரமான வீரர்கள் இருந்தும் சரியான 11 பேர் அணியை தேர்வு செய்யத் தவறிய கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் தான் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தனர். இந்நிலையில் ஐசிசி தரவரிசையில் தங்களைவிட முதலிடத்தில் இருந்தும் 11 பேர் அணியில் செய்த தேவையற்ற மாற்றங்களே ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேறுவதற்கு காரணமாக அமைந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மற்றும் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. “ஐசிசி தரவரிசையை பார்த்தாலே முடிவுகள் உங்களுக்கு தெரியும். இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஒப்பிடும் போது நிறைய பேர் என்னிடம் ஏன் பாகிஸ்தான் அணியில் ஒரே மாதிரியான அணி விளையாடுகிறது என்று கேட்பார்கள். ஒருவேளை யாராவது காயமடைந்தால் விடலாம். மேலும் குறிப்பிட்ட தருணங்களை சரியாக கையாண்டதாலேயே நாங்கள் வென்றோம் என்பதே என்னுடைய கருத்தாகும். அதனால் எதற்காக நாங்கள் வென்ற அணியை மாற்ற வேண்டும்”

IND vs SL

“அந்த வகையில் தங்களுடைய அணியை செட்டாக விடுவதற்கு இந்தியா விடாததே வீழ்ச்சிக்கு காரணமாகும். அவர்கள் அதிகப்படியான மாற்றங்களை செய்தனர். இத்தனைக்கும் பெரிய வீரர்களை வைத்துள்ள அவர்கள் தொடர்ந்து சோதனை செய்தனர். எனவே பெஞ்சில் உள்ள வீரர்கள் பலமானவர்களாக இல்லாத போது நீங்கள் சோதனைகள் செய்ய வேண்டிய அவசியமில்லை. வெற்றி பெறுவதற்கு நீங்கள் முதலில் வலுவான நிலையை அடைய வேண்டும். அதன்பின் அதை பிடித்துக் கொண்டு வெற்றி பாதையில் நடக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : ஆவேஷ் கான் வேணாம். இந்த 5 வேகப்பந்து வீச்சாளரை டி20 உ.கோ டீம்ல எடுங்க – ராபின் உத்தப்பா கோரிக்கை

அதாவது இந்திய அணியில் பெஞ்சில் உள்ள வீரர்களும் தரமானவர்களாக இருப்பதால் அதிகப்படியான சோதனை செய்ய முயற்சிக்கும் இந்திய அணி நிர்வாகம் பேராசையை போல் வெற்றி அணியை கலைத்து பெஞ்சில் உள்ள வீரர்களையும் இந்த முக்கிய தொடரில் பயன்படுத்தி பார்க்க நினைத்ததே தோல்வியை பரிசளித்ததாக ரமீஷ் ராஜா கூறியுள்ளார். ஆனால் தங்களது அணியில் பெஞ்சில் உள்ள வீரர்கள் சற்று அனுபவமில்லாதவர்களாக இருந்தாலும் விளையாடும் 11 பேர் அணியில் வலுவானவர்களாக இருப்பதால் அது போன்ற சோதனைகளை தவிர்த்ததே வெற்றிக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement