கனவில் கூட இந்திய அணிக்கு எதிராக வங்கதேச அணியால் இதை செய்ய முடியாது – ரமீஸ் ராஜா ஓபன்டாக்

Ramiz-Raja
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. கான்பூர் நகரில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று நாட்கள் மழையால் பாதிக்கப்பட்ட வேளையில் அதன் பின்னர் அதிரடியாக விளையாடிய இந்திய அணி பிரமாதமான வெற்றியை பெற்றது.

கனவில் கூட அது நடக்காது :

அதோடு சொந்த மண்ணில் கடந்த 2012-ஆம் ஆண்டிற்கு பிறகு தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்தது. இந்நிலையில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்துவது என்பது கனவில் கூட வங்கதேச அணியால் முடியாது என பாகிஸ்தான அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசி அவர் கூறுகையில் : வங்கதேச அணிக்கு எதிரான இந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி எந்த ஒரு சவாலும் இன்றி எளிமையாக அவர்களை வீழ்த்தி அசத்தியது. பலம் வாய்ந்த இந்திய அணி சொந்த மண்ணில் இன்னும் கூடுதல் பலமாக விளையாடி வருகிறது.

இந்திய மண்ணில் எந்த ஒரு அணியினாலும் அவர்களை வீழ்த்துவது கடினமாக மாறிவிட்ட இவ்வேளையில் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வங்கதேச அணி கைப்பற்றுவது என்பது கனவில் கூட நடக்காத காரியம். சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியிலாவது இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பது பங்களாதேஷ் அணியின் கனவாக இருக்கிறது.

- Advertisement -

ஆனால் அது தொடர்ந்து கனவாகவே இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. அந்த அளவிற்கு இந்திய அணி தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியா போன்ற வெற்றிகரமான அணிக்கு எதிராக வங்கதேச அணியால் சவால் கொடுக்கும் நிலை கூட தற்போது இல்லை என ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : வருத்தமா இருக்கு.. இந்த ஆசை தான் பாகிஸ்தான் வீழ்ச்சிக்கு காரணம்.. அது வரை ஜெய்க்க முடியாது.. அஸ்வின் பேட்டி

அண்மையில் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணியானது அங்கு நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனையை நிகழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement